ஜனாதிபதியின் தவறான தீர்மானங்களால் பாராளுமன்றம் தியவன்னாவின் மீன்தொட்டி போல் மாறிவிட்டது - துஷார இந்துனில் 

Published By: Vishnu

08 Jun, 2022 | 09:49 PM
image

(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் தவறான தீர்மானங்களினால்  சமூக பிரச்சினை தீவிரமடைந்து பாராளுமன்றம் தியவன்னாவின் மீன்தாங்கி போல் மாறிவிட்டது.

மக்களுக்கு பயந்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பாராளுமன்றம் கூடுகிறது.பாராளுமன்றத்திற்கு வருவது வெட்கமாகவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் துஷார இந்துனில் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் 08 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் கூறுகையில் 

ஒரு வரிசையாக காணப்பட்ட எரிபொருள் வரிசை தற்போது இரண்டு,மூன்று வரிசைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரச்சினைகள் குறித்து பிரதமரும்,ஆளும் தரப்பினர்களும் சபையில் தொடர்ந்து குறிப்பிடுகிறார்கள்.பிரச்சினைகள் தொடர்பில் தற்போது குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது.இதனை நாங்கள் கடந்த இரண்டு வருடககாலமாக குறிப்பிட்டு வருகிறோம்.

இரசாயன உரம் பாவனையை இடைநிறுத்திய போது ஏற்படும் விளைவுகளை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம்.விவசாயதுறையை முழுமையாக அழித்து விட்டு தற்போது விவசாயத்தை மேம்படுத்த வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

விவசாயத்துறை தொடர்பில் ஜனாதிபதி மூர்க்கத்தனமான தீர்மானத்தை முன்னெடுக்கும் போது மக்கள் மத்தியில் அரசியல் செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றுக்கொண்டிருந்த சமல் ராஜபக்ஷ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அதனை தவறு என சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.ஆகவே தற்போதைய விளைவுகளில் இருந்த விடுப்பட முடியாது என்றார் 

இதன்போது குறுக்கிட்ட ஆளும் தரப்பின் பிரதம கொறொடா பிரசன்ன ரணதுங்க,நாட்டு தலைவரை அவமதிக்கும் வகையில் கருத்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறான முறையற்றவர்களினால் பாராளுமன்றம் இல்லாமல் போகிறது என்று குறிப்பிட்டார்.

இதன்போது துஷார இந்துனில் நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிதி மோசடியாளர் என்னை முறையற்றவர் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சபையில் வலியுறுத்தினார்.

இதன்போது ஆளும் தரப்பின் பிரதமர கொறோடா பிரசன்ன ரணதுங்க, நான் குற்றவாளி அல்ல என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.நான் மேன்முறையீடு செய்துள்ளேன் ஆகவே நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் நான் குற்றவாளியல்ல,நாட்டின் சட்டம் தொடர்பில் தெளிவில்லாமல் இவர் கருத்துரைக்கிறார் என்றார்.

இதன்போது   துஷார இந்துனில் இன்று பாராளுமன்றம் தியவன்னாவின் மீன்தாங்கி போல் மாறிவிட்டது.பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மக்களுக்கு பயந்து பாராளுமன்ற கூட்டத்தொடர் முன்னெடுக்கப்படுகிறது.பாராளுமன்றத்தின் கௌரவம் இல்லாமல் போய்விட்டது.பாராளுமன்றத்திற்கு வருவது வெட்கமாகவுள்ளது.பாராளுமன்றத்தின் வீண் விவாதம் இடம்பெறுவதால் எவ்வித பயனுமில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55