கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க வேண்டியது அவசியம் - புத்தி ஜீவிகள்

Published By: Digital Desk 3

08 Jun, 2022 | 10:02 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை  கட்டியெழுப்புவதற்கு மருத்துவ குணமுடைய மூலிகையான கஞ்சா பயிர்ச்செய்கையை  இலங்கையில் சட்ட பூர்வமாக்கப்பட வேண்டியது அவசியம். 

கஞ்சாப் பயிர்ச் செய்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை  நீக்கி, அதனை சட்ட பூர்வமாக்குவதற்கு நாட்டின்  தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என புத்தி ஜீவிகள் சிலர் வலியுறுத்தினர்.

'ஹேர்த் ரீஸ்டோரேஷன்' (EARTH RESTORATION) நிறுவனத்தினால் புதன்கிழமை (08) கொழும்பு, மகாவலி  கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போது அவர்கள் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தனர். 

இங்கு உரையாற்றிய பேராசிரியர் வசந்த சேன வெலி,

கஞ்சா என்பது ஓர் போதைப்பொருளாகவே  சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே, அது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகைப்பொருள் மாத்திரமல்ல. 

தென்னை மரத்திலிருந்து பெறப்படும் பயன்பாடுகளைப் போலவே கஞ்சா செடியிலிருந்தும் அதிகளவான பயன்பாடுகளைப் பெற முடியும். இதன் மூலமாக எமது நாட்டின் பொருளாதாரத்தையும் சுகாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என  குறிப்பிட்டார். 

கஞ்சாச் செடியிலிருந்து உணவுப் பொருட்களுக்கான மசாலா வகைகள், மருத்துவ பொருட்கள், எண்ணெய் வகைகள், கிறீம் வகைகள், இனிப்புப் பண்டங்கள், ஆடை உற்பத்திகள், கடதாசி உற்பத்திகள், வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்கள், கயிறுகள் உள்ளிட்ட பலவற்றை உற்பத்தி செய்ய முடியும் எனவும்  அவர் மேலும் தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த சட்டத்தரணி சானக்க அபேவிக்ரம,

"கஞ்சா பயிர்ச் செய்கையை  தொடர்பில் கூறுவதற்கு முன்னர் , கஞ்சாப்  பயிர்ச் செய்கை  எப்போது தடை செய்யப்பட்டது என்பது  தொடர்பில் ஆராய வேண்டும்.  1660 களில் ஒல்லாந்தர்  ஆட்சி காலத்தின்போதுதான் கஞ்சா பயிர்ச் செய்கைக்கான நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தபோதிலும், 1929 லேயே சட்டம் இயற்றப்பட்டது. 

தேயிலை, தெங்கு, இறப்பர் ஆகியவற்றுக்கு ஆராய்ச்சி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளது போலவே, கஞ்சா பயிர்ச் செய்கைக்கும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட வேண்டும். இதனை சட்டபூர்வமாக்குவதற்கு அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்" என்றார்.

ஆயுர்வேத வைத்தியர் நிமல் வர்ண சூரிய கூறுகையில் ,

கஞ்சா சுருட்டின் மூலமாக ஒரு வீத பயன்பாட‍ே பெறப்படுகின்றது. எனினும், அதன் முழுப் பயன்பாட்டை பெறுவதற்கு முடியாமல் போயுள்ளது. கஞ்சா விதைகள் மூலம் கிடைக்கப் பெறும் எண்ணெய் புற்றுநோயைக் கூட குணப்படும் ஆற்றல் உள்ளது. இந்த பயிர்ச் செய்கையை சட்டபூர்வமாக்க படுவதன் ஊடாக எமது நாடு வெளிநாடுகளுக்கு கஞ்சாவை ஏற்றுமதி செய்ய முடிவதுடன், நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும்.   எனக்  குறிப்பிட்டார்.

மேலும் கனடா, அமெரிக்கா, மேலைத்தேய நாடுகளில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. தாய்வானில் எதிர்வரும்  20 ஆம் திகதி கஞ்சா செடி பயிரிடும் மாபெரும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வாறான நிலையில், எமது நாட்டிலும் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கி அதன் பயன்களை பெறப்பட வேண்டும் என  ஹேர்த் ரீஸ்டோரேஷன்' (EARTH RESTORATION) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரணில் சேனாநாயக்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04