நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்க சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் - தயாசிறி

Published By: Vishnu

08 Jun, 2022 | 08:46 PM
image

(எம்.மனோசித்ரா)

மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு துரித தீர்வினை வழங்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். எனினும் இதனைக் காரணமாகக் காண்பித்து 21 ஆவது திருத்தத்தினை புறந்தள்ள முடியாது.

இதன் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்று அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் 7 ஆம் திகதி நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் சர்வகட்சி அரசாங்கத்தினையே எதிர்பார்த்தோம். எனினும் தற்போதிருப்பது கட்சிசார்பற்ற அரசாங்கமாகும். எந்தவவொரு கட்சியிலிருந்து எவரும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவில்லை.

மாறாக ஒவ்வொரு கட்சிகளிலிருந்தும் உறுப்பினர்களை பிரித்து இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால் நாம் எமது ஒத்துழைப்பினை வழங்கியிருப்போம்.

நாம் எவ்வித பதவிகளையும் எதிர்பாரக்கவில்லை. மாறாக சகல கட்சிகளுக்கிடையிலும் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகக் காணப்பட்டது.

அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் ஒன்றிணைந்து பொதுவானதொரு வேலைத்திட்டத்திற்குச் செல்ல வேண்டும். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள துரதிஷ்டவசமான நிலைமையிலிருந்து மீள வேண்டுமெனில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு துரித தீர்வினை வழங்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

எனினும் இதனைக் காரணமாகக் காண்பித்து 21 ஆவது திருத்தத்தினை புறந்தள்ள முடியாது. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு , விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் எதிர்ப்புக்கள் வலுப்பெற்றுள்ளன.

இவை அனைத்திற்கும் ஜனாதிபதி பொறுப்பு கூற வேண்டும். அத்தோடு அவரது அதிகாரங்களும் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

எனினும் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு இடையூறாகவுள்ளார். தற்போது 21 ஐ விட மக்களுக்கான உணவு பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும் என்று கூற முடியாது.

21 நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம். அதனுடன் சேர்த்து மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02