பாடசாலைக்கு கால தாமதமாக வரும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் - அதிபர்களிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை

Published By: Vishnu

08 Jun, 2022 | 04:42 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பாடசாலைக்கு  காலதாமதமாக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்கவேண்டும்.

அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது  இதுதொடர்பான் சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 8 ஆம் திகதி புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி எம்.பி. யான துஷார இந்துனில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

நாட்டில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோதிலும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இடம்பெறாமையால்  தரம் 1, 2 மாணவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். ஏனெனில் இந்த தரங்களிலேயே மாணவர்களுக்கு எழுத்து எழுதுவதற்கு பழக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு 197 நாட்கள் பாடசாலை செயற்பாடுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால், மேல்மாகாணத்தில் 94 நாட்கள் மட்டுமே பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெற்றன.ஏனைய மாகாணங்களில் 117 நாட்கள் நடைபெற்றன. மேல் மாகாணத்திலேயே அதிக நாட்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

2021 ஆம் ஆண்டு 229 நாட்கள் பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் நடைபெற வேண்டிய நிலையில், மேல் மாகாணத்தில் 102 நாட்களே பாடசாலைகளின் செயற்பாடுகள் நடைபெற்றன.

ஏனைய மாகாணங்களில் 143 நாட்கள் நடைபெற்றன. 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவனையின் 23 நாட்களில் 14 நாட்களே பாடசாலைகளின் செயற்பாடுகள் நடைபெற்றன.

2 ஆம் தவனையில் தற்போது 24 நாட்கள் உள்ளன. எனவே, எஞ்சிய தினங்களையும் சேர்த்து ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 44 நாட்கள் பாடசாலையின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

உயர்தரப்பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை கவனத்தில் எடுத்து நாம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

 அத்துடன் இன்று நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி  நிலைமைக் காணப்படுகிறது. அதேபோன்று பஸ் போக்குவரத்து குறைந்த்திருக்கின்றது. 

இதனால் மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிப்படையும் வகையில் செயற்பட முடியாது. இதுதொடர்பாக நாம் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம்.

இதில் மாணவர்கள் – ஆசிரியர்கள் காலதாமதமாக பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும்போது, சீருடையில் பிரச்சினைகள் ஏற்படும் போது, மாணவர்கள் காலணிகளை அணியாதபோது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தவிர்த்து அவர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குமாறு நாம் கேட்டுள்ளோம்.  இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி அமைச்சினால்  வெளியிடப்படும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24