அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 17வது சிரார்த்த தினம்.!

Published By: Robert

30 Oct, 2016 | 01:15 PM
image

(ந.ஜெகதீஸ்)

மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்த்தாபகருமான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 17 ஆவது சிரார்த்த தினம் இன்று காலை அநுஷ்டிக்கப்பட்டது. 

மலையத்தின் மூத்த அரசியல் தலைவரான இவர் 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி பிறந்தார். அரசியற் துறையில் ஆளுமையுடன் செயற்பட்ட இவர் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுத்ததோடு அவர்களுக்கான பிரஜா உரிமை கிடைப்பதற்கும் அளப்பறிய சேவையாற்றியுள்ளார். 1945 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். மூன்று முறை பாராளுமன்ற அங்கத்துவம் கிடைத்ததுடன் 1978 முதல் 1999 வரையிலான காலப்பகுதியில் இரு முறை அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் பெற்று மக்களுக்கான சமூகப்பணியாற்றியுள்ளார். இவ்வாறு தமது அரசியல் மற்றும் சமூக பணிகளை ஆற்றிய அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி காலாமானார்.   

இந்நிலையில் அன்னாரது 17 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று காலை காலிமுகத்திடலிலுள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தொகுதி முன்பாக அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அநுவிக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினறுமான முத்துசிவலிங்கம் சட்டத்தரனி மாரிமுத்து மத்திய மாகாண அமைச்சர் ரமேஷ்வரன் மத்தியமாகாண சபை உறுப்பினர்களான சக்திவேல் கணபதிகணகராஜ் மதியுகராஜா ஜெகதீஸ்வரன் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்த்தர்களும் பங்கேற்றதுடன் அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அனுவித்தும் கௌரவித்தனர். அதனை தொடர்ந்து கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள சௌமியபவனில் அன்னாரது ஆத்ம சாந்தி வேண்டி விசேட வழிபாடுகளும் இடம்பெற்றது. 

இதன்போது, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த நினைவாக, அவரைப்பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணக்கண்காட்சியொன்றும் இடம்பெற்றது. இக்கண்காட்சியில் அவரது வாழ்க்கை வரலாறு, தொழிற்சங்கப் பணிகள், அரசியல் நடவடிக்கைகள், கலந்து கொண்ட உள்ளூர் மற்றும் சர்வதேச மாநாடுகளில் ஆற்றிய உரைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அடங்கிய தொகுப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

மேலும் தொழிற்சங்கப் போராட்டங்கள், அரசியல் போராட்டங்கள், சாதனைகள் முக்கிய பிரமுகர்கள் உடனான சந்திப்புக்கள் வரலாற்று பதிவேடுகள் என்பனவும் அன்னாரால் பாவிக்கப்பட்ட பலவிதமான பாவனைப் பொருட்கள் சமய சமூக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், தேசத்தலைவர்கள் மற்றும் சர்வதேசத் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட வரலாற்றுப் அறியவகை புகைப்படங்களும் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46