மாபியாக்களின் நோக்கத்திற்கு இடமளிக்க முடியாது - அமைச்சர் கஞ்சன உறுதி

Published By: Vishnu

08 Jun, 2022 | 04:34 PM
image

(இராஜதுரை ஹஷான் ,எம்.ஆர்.எம்.வசீம்)

புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் செயற்திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் உள்ள தடைகளை நீக்கிக்கொள்வதற்காகவே  மின்சாரச் சட்டத்தை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மின் கட்டண சுமையை மக்கள் மீது சுமத்த முடியாது.

மின்சாரசபை மாபியாக்களின் நோக்கத்திற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நிச்சயம் மின்சார சட்டம் திருத்தம் செய்யப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 08 ஆம் திகதி புதன்கிழமை இன்று இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது மின்சார சட்டத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை மின்சார திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் சேவையாளர்களில் ஒரு சிலர் தவறான கருத்துக்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.இச்சட்டம் திருத்தம் செய்யப்படுவதால் மின்சார சபையில் இதர விடயங்களுக்கான போட்டித்தன்மை குறைவடையாது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவைக்கமைய மின்சாரச் சட்டத்தை திருத்தம் செய்ய முயல்வதாக குறிப்பிடுப்படுவது அடிப்படையற்றதாகும்.இலங்கை மின்சாரம் சட்டம் திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து மின்கட்டணம் தொடர்பில் தீர்மானம் எடுக்கம் உரிமம் இலங்கை மின்சார சபைக்கு பொறுப்பாக்கப்படும்.

இலங்கை மின்சார சபை தன் விருப்பத்திற்கமைய மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது.ஒழுங்குப்படுத்தப்பட்ட  தரப்பினரின் ஆலோசனைகளுக்கமை நடைமுறைக்கு பொருத்தமான சூத்திரத்திற்கமைய மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்.

 புதுப்பிக்கத்;தக்க சக்தி வளங்கள் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்கிக்கொள்ளும் வகையில் மின்சாரம் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.மின்சார சட்டம் நிச்சயம் திருத்தம் செய்யப்படும்.

மின்சார கட்டணத்தை நூற்றுக்கு  முந்நூறு வீதத்தினால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என .மின்சார சபைதொடர்ந்து வலியுறுத்தியுள்ளது.நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் இந்த யோசனையை  அமைச்சரவையில் சமர்ப்பிக்க போவதில்லை.

மின்னுற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் அதனை குறைத்துக்கொள்வதற்காக புதுப்பிக்கத்தக்க வள செயற்திட்டத்தை  முறையாக செயற்படுத்த சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக மக்கள் தாக்குதல்களை மீண்டும் முன்னெடுப்பார்கள்.

மின்சார சபை மாபியாக்களின் நோக்கத்திற்கு இடமளிக்க முடியாது.மின்சார சட்டம் திருத்தம் செய்யப்படும்.சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என 2013ஆம் ஆண்டு முதல் அவதானம் செலுத்தப்பட்ட போதும் அதனை செயற்படுத்த முடியாமல் போயுள்ளது.

மின்வாரத்துறை எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண வேண்டுமாயின் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்கள் மின்சாரத்துறைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10