பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில்

Published By: Digital Desk 4

08 Jun, 2022 | 01:42 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

தேசிய பாடசாலைகளில் மொத்தமாக 3570 ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகின்றது. அதில் தமிழ் மொழி மூலமாக 117 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றது.

அதேபோன்று மாகாண  பாடசாலைகளில் சுமார் 8ஆயிரம் ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் முக்கிய தீர்மானம் - சுசில் |  Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ராேஹினி குமாரி கவிரத்னவினால் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி தனது கேள்வியில், இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்கள் எத்தனை என்பதையும். அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுத்து வரும் நடவடிக்கை என்ன என்பதையும் கேட்டிருந்தார்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

நாட்டில் மொத்தமாக 396 தேசிய பாடசாலைகளும்  9590 மாகாண பாடசாலைகளும் இருக்கின்றன. இதில் தேசிய பாடசாலைகளில் தமிழ் மொழி மூலமாக அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் எண்ணிக்கை 7488ஆகும்  தற்போதுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 7371ஆகும் .

பற்றாக்குறையாக இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 117 ஆகும்.  நாட்டில் இருக்கும்  மொத்த தேசிய பாடசாலைளில்  அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 43030ஆகும்  . தற்போதுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 39460ஆகும்  மொத்தமாக 3570 ஆசிரியர் பற்றாக்குறையாக  இருக்கின்றது.

அதேபோன்று மாகாண பாடசாலைகளில் மொத்தமாக சுமார் 8ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதுடன் சில மாகாணங்களில் மேலதிக ஆசிரியர்கள் காணப்படுகின்றன. அதனால் தற்போது வெற்றிடமாகி இருக்கும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதற்காக  2018,2019,2020 காலப்பகுதியில் அரச சேவைக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளில்  35வயதுக்கு குறைந்த ஆசிரியர் தொழிலுக்காக விரும்பம் தெரிவித்திருப்பவர்களின் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் கோரி, வெற்றிடமாகி இருக்கும் 22ஆயிரம் பேரை அனுமதித்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கின்றது.

அதன் பிரகாரம் தகுதியானவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு பயிற்சி வழங்கி, இந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களையும் ஜனவரி மாதமாகும் போது நிரப்ப நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று கல்வி நிர்வாக சேவையில் 620 வெற்றிடம் காணப்பட்டது. தற்போது அது 700ஆக அதிகரித்துள்ளது.

அதனால் கல்வி நிர்வாக சேவைக்கு இணைத்துக்கொள்ள தற்போது விண்ணப்பம் கோரி இருக்கின்றோம். 2வாரங்களில் பரீட்சை நடத்தி அவர்களை இணைத்துக்கொள்ள இருக்கின்றோம் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56