கிராமவாசிகள் குயின்ஸ்டவுன் பெருந்தோட்டத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்ததால் அமைதியின்மை

Published By: Vishnu

08 Jun, 2022 | 12:42 PM
image

ஹாலி-எலையைச் சேர்ந்த குயின்ஸ்டவுன் பெருந்தோட்டத்தின் ஒரு பகுதியை, கிராம வாசிகள் ஆக்கிரமித்து தம் வசமாக்கிக் கொண்டதையடுத்து, தோட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

இச்சம்பவம் இன்று குயின்ஸ்டவுன் பெருந்தோட்டத்தின் கிராமத்தை அண்மித்த தோட்டக் காணியில் இடம் பெற்றுள்ளது.

ஹாலி- எலையில் 70 குடும்பங்களைச் சார்ந்த கிராமிவாசிகள், குயின்ஸ்டவுன் பெருந்தோட்டத்தின் கிராமத்தை அண்மித்த தோட்டக் காணியை ஆக்கிரமித்து, தமக்குத்தாமே எல்லைகள் போட்டு பிரித்துக் கொண்டு செயற்பட்டனர்.

இது குறித்து குயின்ஸ்டவுன் பெருந்தோட்ட முகாமையாளர் ஹாலி-எலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை செய்துள்ளார்.

இம்முறைப்பாட்டையடுத்து, ஹாலி-எலைப் பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து, பெருந்தோட்டத்தை ஆக்கிரமித்திருந்த கிராமவாசிகளுடன் சுமூக பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு, அங்கிருந்து தற்காலிகமாக அவர்களை வெளியேறுமாறு கூறிதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் பொலிசார் வழங்கிய உறுதிமொழிக்கமைய, பெருந்தோட்டத்தை விட்டு வெளியேறினர்.

குறிப்பிட்ட பெருந் தோட்டக்காணி காடாக்கப்பட்டு வருவதினால், அக்காணியை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கும், வெறுங்காணிகளில் விவசாயத்தை மேற்கொள்ள அரசு விடுத்துள்ள கோரிக்கைக்கமையவுமே, தமக்குத்தாமே குறிப்பிட்ட காணியை பிரித்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தோம். தோட்ட முகாமைத்துவம் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிபந்தனைகளை முன்னிலைப்படுத்தி, அக்காணியில் விவசாயத்தை மேற்கொள்ள அனுமதியைப் பெற்றுத் தருமாறு, கிராமவாசிகள் பொலிசாரிடம் கேட்டுக் கொண்டனர்.

பொலிசாருக்கும் கிராமவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட சுமூகப் பேச்சுவார்த்தையின் போது, 'குறிப்பிட்ட தோட்ட முகாமையாளர், தோட்டத்தை பொறுப்பேற்ற கம்பனி முகாமைத்துவத்தினர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று' பொலிசார் கூறினர்.

இக் கூற்றினையடுத்து பெருந்தோட்டத்தை ஆக்கிரமித்த கிராமவாசிகள், தோட்டத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08