* கடலை மாவு, எலுமிச்சைச்சாறு, வெந்தயத்தூள் மூன்றும் தலா 1 டீஸ்பூன் கலந்து தலையில் தேய்த்துக் குளிக்கவும். சிலருக்கு தலைக்குக் குளித்தாலே  கூந்தலில் உள்ள ஈரப்பதம் எல்லாம் நீங்கி வறண்டு, முடியெல்லாம் பறக்கும். இந்த சிகிச்சை அப்படி மண்டைப் பகுதியில் உள்ள எண்ணெய் பசையை முற்றிலும் நீக்காமல்,  தேவையான எண்ணெய் பசையை விட்டு, சரியான அளவு எண்ணெய் பதத்தைத் தக்க வைக்கும். கண்டிஷன்  செய்யும்.

* கொட்டை நீக்கிய பூங்கக்காய் தோலுடன், 2 டீஸ்பூன் பயத்தம்பருப்பை முதல் நாள் இரவே ஊற வைத்து அரைத்து தலையை அலசவும். வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால் அதிகப்படியான எண்ணெய் பசையால் அழுக்காகி, முடி உதிராமல் காக்கும். 

* முட்டையின் வெள்ளைக்கருவுடன்  1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் சீயக்காய்த்தூள் கலந்து நன்றாக அடித்து தலையில் தேய்த்து குளிக்கவும். இது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும். புரதச்சத்து, எண்ணெய் பசை, சுத்திகரிக்கும் பொருட்களின் கலவை இருப்பதால் அடர்த்தி அதிகரிக்கும்.

* செம்பருத்தி இலை 10 எடுத்துக் கொள்ளவும். 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, இந்த இலையை தண்ணீரில் போடவும். 1 மணி நேரம் கழித்து 2 டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து தலையை அலசவும். வறண்ட கூந்தல் பிரச்சினையை சரியாக்கி, கூந்தல் உடையாமல் நீளமாக வளர உதவும். 

* ஒரு பட்டை சோற்றுக்கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல்லியை மிக்சியில் அடித்து  நீராக்கவும், இதில் சிறிது வெந்தயத் தூள்  சேர்த்து கூந்தலை அலசவும்.  இது முடியை கறுப்பாக்கும். செம்பட்டை நீங்கும், 

* தேங்காய்ப்பால் 1/4 கப் எடுத்து தேங்காய் எண்ணெய் தடவுவது போல் தடவி தலையை சீப்பால் வாரி விடவும். 1/2 மணி நேரம் ஊறிய பின் வெதுவெதுப்பான நீரில் 1/2 மூடி எலுமிச்சைச்சாறு கலந்து தலையை அலசவும். அப்படியே ஒரு நாள் விடவும். மறுநாள் முடி பள பளப்பாகும். பிசுபிசுப்பாக தெரியாது. 

* வெந்தயம்  1 டீஸ்பூன், துவரம்பருப்பு  1 டீஸ்பூன், மிளகு  10 அனைத்தையும் முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் மிக்சியில் அடித்து, வடிகட்டி தலையில் தேய்த்து அலசவும். இதுவும் கூந்தல் அடர்த்திக்கு உதவும்.

* இரண்டு செம்பருத்தி இலை, 10 மருதாணி இலை, 2 டீஸ்பூன் பயத்தம் பருப்பு அனைத்தையும் அரைத்து தலையில் பேக் போட்டு 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். இது கூந்தலின் பிசுபிசுப்பு, அழுக்கை எல்லாம் நீக்கி, மிருதுவாக, அடர்த்தியாக மாற்றும்.

  2 டீஸ்பூன் தயிருடன், 1 டீஸ்பூன் வெந்தயத்தூள் கலந்து வாரம் 2 முறை தலையில் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும். கூந்தல் உதிர்வது நிற்கும்.

* சாதம் வடித்த கஞ்சியுடன், கடலை மாவு கலந்து தலையை அலசவும். கூந்தல் பட்டு போல மாறுவதை உணர்வீர்கள். 

* தினமும் 10 வேர்க்கடலையை உண்ணும் பழக்கத்தை வைத்துக் கொள்வது முன் வழுக்கையை தவிர்க்கும்.

* 1 டீஸ்பூன் ஓமத்தை, 200 மி.லி. தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரை அருந்துவது, பொடுகு பிரச்சினைக்கு  மூலகாரணமான அசிடிட்டியை எடுக்கும். கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும்.

* தினமும் 1 கீரை, குறிப்பாக வாரம் இரண்டு முறை முருங்கைக்கீரை உண்பதை வழக்கமாக எடுத்துக் கொண்டால் இரத்தச் சோகையால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். இளநரையையும் தவிர்க்கலாம்.

* பெரிய நெல்லிக்காய் ஒன்று தினமும் சாப்பிட்டு வந்தால் முடி கருகருவென்று வளரும்.

*வாரத்தில் 3 நாட்கள் தேன், திைன மாவு, வெல்லம் இவற்றை உண்டு வருபவர்களுக்கு தலைமுடி பிரச்சினை வராது.நரை இன்றி, கறுப்பான கூந்தலும் வளரும்.

* கருஞ்சீரகம், நெல்லிமுள்ளி சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் 1/2 டீஸ்பூன் அளவு காலையில் எடுத்துக் கொள்வது கருகருவென்று முடி வளர்ச்சியைத் தூண்டிவிடும்.

* நான்கு பாதாம்பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் மேல் தோலெடுத்து அதை அப்படியே சாப்பிடுவது புரதச்சத்து குறைவைத் 

தடுக்கும்.  முடி மெலிதாவதை தடுக்கும்.

* பப்பாளிப்பழ துண்டுகள்  4, சப்போட்டா துண்டு 4, ஆப்பிள் 4, இவற்றை பழமாக அப்படியே உண்பதை தினசரி வழக்கமாகக்  கொள்ளவும். இவற்றில் நார்ச்சத்துடன்  விற்­றமின் மற்றும் தாதுச்சத்துகள் கிடைப்பதால் தலை நடுவே வழுக்கை விழ ஆரம்பிப்பதைத் தடுக்கும். 

* தினமும் இரவில் பால் அருந்துவது அவசியம். இதிலுள்ள கல்சியம் மற்றும் புரதம் இரண்டும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியம்.  பொடுகு தொல்லை வராமலும் தடுக்கும்.

* அத்திப்பழம், மாம்பழம், தேன்  மூன்றையும் ஒரு லேகியமாக கலந்து, தினமும் 1 டீஸ்பூன் சாப்பிடுவது  இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். முடி மெலிவது, நரைப்பது சரியாகும்.

* கரிசலாங்கண்ணி கீரை 1 கப் எடுத்து, 50 மி.லி. தேங்காய் எண்ணெயில் கலந்து தைலம் தயாரித்து, வாரம் 1 முறை ெஹாட் ஒயில் மசாஜ் செய்து வரவும். பிறகு கடலை மாவு, சீயக்காய் மாதிரி ஏதேனும் உபயோகித்து கூந்தலை அலசலாம். இதே எண்ணெயை தினசரி தலைக்கும் தேய்க்கலாம். கருகரு கூந்தலுக்கும், வளர்ச்சிக்கும் உதவக்கூடியது இந்த சிகிச்சை.

* ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெயை  உச்சந்தலையில் வைத்து நன்றாக தேய்த்து 1 மணி நேரம் ஆன பின் கடலைமாவு தேய்த்து தலையை அலசவும். வாரம் 2 முறை இப்படிச் செய்யவும். உஷ்ணத்தால் கூந்தல் வளராதவர்களுக்கு  இது குளிர்ச்சியைக் கொடுத்து, வளர்ச்சியை அதிகரிக்கும். 

* பத்து வேப்பந்தளிரை, 10 மிளகு சேர்த்து கால் கப் நல்லெண்ணெயில் சேர்த்துத் தைலம் காய்ச்சவும். இதை தலையில் தேய்த்து நன்றாக வாரவும். பிறகு வெந்நீரில் டவலை நனைத்து நன்றாக பிழிந்து தலையில் ஒற்றி எடுக்கவும். இது தலைமுடியை நன்கு வளரச் செய்யும்.

* ஆலிவ் எண்ணெய்  1 டீஸ்பூன், நல்லெண்ணெய்  1 டீஸ்பூன்,தேங்காய் எண்ணெய்  1 டீஸ்பூன் மூன்றையும் தனித்தனியாக சூடு செய்து தனித்தனியே 3 ெகாட்டன் பட்ஸ் வைத்து தலையில் நன்றாக தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து சீயக்காய் கொண்டு தலையை அலசவும். அடர்த்தியான கூந்தலுக்கும் உதவும்.

* இலவங்கம்  4, கரிசலாங்கண்ணி கீரை  1/2 கப், கீழாநெல்லிக்கீரை  1/2 கப், வெந்தயக்கீரை  1 பிடி ஆகியவற்றைக் கொண்டு  தைலம் தயாரிக்கவும். இதை உபயோகித்து மசாஜ் செய்து குளித்து வருவது முன்வழுக்கை, புழு வெட்டு முதலிய பிரச்சினைகளை தவிர்க்கும்.