குழந்தைகளின் ஆற்றலை அழிவுக்குள்ளாக்கும் திரைக்காட்சிகள்

Published By: Robert

30 Oct, 2016 | 11:41 AM
image

ஆற­றிவு படைத்த மனிதன் அறி­வியல் கொண்டு படைத்த சாத­னங்கள், மனித செயற்­பா­டு­களை விரை­வாக்க உத­வு­கின்­றன என்று கூறினால், அது மிகை­யில்லை. சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர், பல நாட்கள், அல்­லா­விடின் பல மாதங்கள் எடுத்த பணிகள் தற்­போது மிகக் குறு­கிய காலப்­ப­கு­தியில் நிறை­வு­றுத்­தப்­ப­டு­வதைக் காணலாம். அபி­வி­ருத்திப் பணி­க­ளான வீதிகள் மற்றும் பாலங்கள் அமைத்தல். கட்­ட­டங்கள் அமைத்தல், என்­ப­வற்­றினை அவ­தா­னிக்­கையில் இவ்­வி­டயம் எளிதில் புல­னாகும். இது­மட்­டு­மல்­லாமல், அலு­வ­ல­கங்­க­ளிலும் கணி­னிகள் மற்றும் அவற்­றிற்­கி­டை­யி­லான வலை­ய­மைப்­புக்கள் என்­பன, அலு­வ­லகப் பணி­களை இல­குவில் ஆற்றத் துணை­பு­ரி­கின்­றன.

இதே­வேளை, பொழு­து­போக்குச் சாத­னங்­களும் அறி­வியல் ஆய்­வு­களால் படைக்­கப்­பட்டு, படிப்­ப­டி­யாக அவை மனி­தனின் விருப்­பு­க­ளுக்­கேற்ப மெரு­கேற்­றப்­பட்டு வரு­கின்­றன. துல்­லி­ய­மான காட்­சி­களைத் தரும் தொலைக்­காட்சிச் சாதனம் மட்­டு­மல்­லாமல், கணினி மற்றும் சிறப்புக் கைத்­தொ­லை­பே­சி­களும் பொழு­து­போக்குச் சாத­னங்­க­ளாக உரு­வெ­டுத்து, மனி­தனின் நேரத்­தினை வீண­டிக்கும் சாத­னங்­க­ளா­கவும் சில­வே­ளை­களில் மாறி­வி­டு­கின்­றன.

எமது கரங்­களில் தவழும் அநே­க­மான கைய­டக்க சாத­னங்கள் தற்­போது தொடு­திரைச் சிறப்­பி­யல்­பினைப் பெற்­ற­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன இச்­சா­த­னங்­களைக் கையாள்­வதில் பெரி­யோரைப் பார்க்­கிலும் குழந்­தைகள் மற்றும் சிறு­வர்கள் கில்­லா­டி­களாகத் திகழ்­கின்­றனர். இவை தொடர்பில் இளந்­த­லை­மு­றையின் சுட்டித்­த­னத்­தினை அவ­தா­னிக்கும் பெற்­றோர்கள், அவர்­க­ளுக்கு தொடு­திரை கொண்ட இலத்­தி­ர­னியல் சாத­னங்­களைப் பரி­ச­ளித்­து­வி­டு­கின்­றனர். அவற்­றினை உப­யோ­கிக்கும் குழந்­தைகள் மற்றும் சிறு­வர்கள், குனிந்த தலை நிமி­ராமல், நேரம்­போ­வதே தெரி­யாமல், அவற்­றுடன் நேரத்­தினைச் செல­வ­ழிக்­கின்­றனர். குழந்­தைகள் மற்றும் சிறு­வர்­களை நேரக்­கட்­டுப்­பா­டின்றி இச்­சா­த­னங்­களை உப­யோ­கிக்க அனு­ம­திப்­பது நல்­ல­தல்ல என குழந்தை நல மருத்­து­வர்கள் எச்­ச­ரிக்­கின்­றனர்.

புதிய கைய­டக்க இலத்­தி­ர­னியல் சாத­னங்கள் தற்­போதே இங்கு பலரின் கைக­ளிலும் தவழ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. ஆனால், அமெ­ரிக்­காவில் இச்­சா­த­னங்கள் சிறுவர் முதல் பெரியோர் வரை அனை­வரின் கரங்­க­ளிலும் ஏலவே உப­யோ­கத்தில் உள்­ளன. இச்­சா­த­னங்­களின் புதிய பதிப்­புக்­களை வைத்­தி­ருப்­பது சமு­தா­யத்தில் மதிப்­பினை ஏற்­ப­டுத்தும் என எண்­ணு­ம­ள­விற்கு இச்­சா­த­னங்கள் மீதான மோகம் அங்கு காணப்­ப­டு­கின்­றது. இச்­சா­த­னங்­களைத் தொடர்ந்து உப­யோ­கிப்­பதால் அமெ­ரிக்க இளைய தலை­மு­றையில் ஏற்­படும் பாதிப்­பினை அவ­தா­னித்த குழந்தை நல மருத்­து­வர்கள் இச்­சா­த­னங்கள் தொடர்­பி­லான நேரக் கட்­டுப்­பாட்­டினைப் பரிந்­து­ரைத்­துள்­ளனர். அண்­மையில் அமெ­ரிக்­காவின் சான்­பி­ரான்­சிஸ்கோ நகரில் இடம்­பெற்ற அமெ­ரிக்க குழந்தை நல மருத்­து­வர்­களின் மாநாட்டில் இப்­ப­ரிந்­து­ரைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இப்­ப­ரிந்­து­ரைகள் குழந்­தை­களின் வயது அடிப்­ப­டையில் வகுத்து வழங்­கப்­பட்­டுள்­ளன.

18 மாதங்கள் மற்றும் அதற்குக் கீழ்ப்­பட்ட வய­தி­னை­யு­டைய குழந்­தைகள் 

இந்த வய­து­டைய குழந்­தைகள் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளி­லி­ருந்து தவிர்க்­கப்­ப­ட­வேண்டும் என மருத்­து­வர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். தொலைக்­காட்­சி­யினைப் பார்­வை­யிட்­ட­வாறு தாயொ­ருவர் தன் குழந்­தையைப் பரா­ம­ரித்­துக்­கொண்­டி­ருந்தால், தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யி­லி­ருந்து வரும் ஒளி மற்றும் சத்தம் என்­ப­வற்றால் குழந்தை மிகை­யாகத் தூண்­டப்­படும் சாத்­தியம் உள்­ள­தாக அமெ­ரிக்க மருத்­துவர் சாசி­யாகோஸ் தெரி­விக்­கின்றார். இது குழந்­தையில் அமை­தி­யின்மை மற்றும் நித்­திரைக் குழப்­பங்­களைத் தோற்­று­விக்கும் என அவர் கூறு­கின்றார். தாயொ­ருவர் குழந்­தைக்குப் பாலூட்­டு­கையில், அக்­கு­ழந்­தை­யுடன் கண்­தொ­டு­கையில் (குழந்­தையின் கண்ணை தாய் நோக்­குதல்) இருந்தால் அது குழந்­தையின் மூளை வளர்ச்­சிக்கு உதவும் என அவர் மேலும் தெரி­விக்­கின்றார்.

இரண்டு வயது தொடக்கம் 5 வய­துள்ள சிறு­வர்கள்

இந்த வய­துள்ள சிறு­வர்­க­ளுக்கு திரைக்­காட்­சிகள் நாளொன்­றுக்கு ஒரு மணித்­தி­யாலம் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. தொலைக்­காட்சி நிகழ்ச்­சிகள் மற்றும் இணையம் வழி­யே­யான காட்­சிகள், இவ்­வ­யதுச் சிறு­வர்­களின் நுகர்வுப் பண்­பினை அதி­க­ரித்து, ஆக்­கத்­தி­றனைச் சித­ற­டித்­து­விடும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும், ஆறு வயது மற்றும் அதற்கு மேற்­பட்ட வய­துள்ள சிறு­வர்கள் எவ்­வ­கை­யான காட்­சி­களைப் பார்க்­கி­றார்கள் என்­பது மட்டில் பெற்றோர் அக்­க­றை­யுடன் இருக்க வேண்டும் என குழந்தை நல மருத்­து­வர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்பு நிறு­வ­னங்­க­ளி­டை­யே­யான போட்­டிகள் மற்றும் கட்­டுப்­பா­டில்­லாத இணையச் சுதந்­திரம் என்­பன குழந்­தைகள் மற்றும் சிறு­வர்­க­ளுக்கு ஒவ்­வாத காட்­சி­களை வீடு வரை வந்து சேர்­வ­தற்கு வழி­வ­குக்­கின்­றன. நல்­லது எது கெட்­டது எது எனப் பகுத்து அறிய முடி­யாத சிறுவர் சிறு­மி­யர்கள் தீய­வற்றின் பால் இல­குவில் கவ­ரப்­பட்­டு­வி­டக்­கூடும் என்­பதே சமூக ஆர்­வ­லர்­களின் அச்­ச­மாகக் காணப்­ப­டு­கின்­றது. 

புதிய இலத்­தி­ர­னியல் சாத­னங்­களைக் கையாள்­கையில் அது தரும் காட்­சி­களை நுகர்ந்து, மெய்­ம­றந்து போகாது, இக்­க­ருவி நுட்­ப­மாக இயங்­கு­வ­தற்­கான அறி­வியல் பின்­னணி என்ன என இளைய தலை­மு­றை­யினர் சிந்­திப்­பார்­க­ளே­யானால், வியக்­கத்­தக்க படைப்­புக்­களை அவர்­க­ளாலும் உரு­வாக்க இயலும். எனவே, தொலைக்­காட்சி மற்றும் திரைக்­காட்­சி­களில் நேரத்­தினை அதிகம் வீண­டிக்­காது, கற்­றலில் தமது நேரத்­தினைச் செல­விட்டால், புதிய நோக்­கி­லான சாத­னங்­களைப் படைப்­ப­தற்­கான இய­லுமை எம் இளை­ய­வர்­க­ளிலும் உரு­வாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48