பாராளுமன்றின் வருடாந்த அறிக்கைகளை இலத்திரனியல் பிரதிகள் மூலம் வெளியிட முடிவு - சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்

Published By: Digital Desk 5

07 Jun, 2022 | 01:23 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றின் வருடாந்த அறிக்கைகள், செயலாற்று   அறிக்கைகள் உள்ளிட்ட ஏனைய அறிக்கைகளை இலத்திரனியல்  பிரதிகள் மூலம் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை (07) கூடிய போது பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை அறிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது நிலவும்  பொருளாதார நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு  எதிர்காலத்தில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

வருடாந்த அறிக்கைகள் , செயலாற்று அறிக்கைகள்  உள்ளிட்ட ஏனைய அறிக்கைகளை இலத்திரனியல் பிரதிகள் மூலம் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைளை அச்சிடும் செயற்பாடுகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், குறுந்தட்டுக்கள்'ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமம் அத்துடன் அவற்றுக்கான அதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளமை, குறுந்தட்டுக்களை மீள்சுழற்சி செய்யும் போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பாராளுமன்ற விவகாரம் தொடர்பான குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அதற்கமைய பாராளுமன்ற அறிக்கைகளை இலத்திரனியல் முறைமைக்கு உள்ளடக்க  அதிகாரி ஒருவரை நியமித்து,குறிப்பிட்ட தினத்திற்குள் குறித்த அறிக்கைகளின் பிரதிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து மனுக்களின் பிரதிகளும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு மனுக்களின் பிரதிகளும்  தம க்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர்   சபைக்கு அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04