பெண்­களில் ஆரம்ப கர்ப்ப காலத்தில் தோன்றும் கருக்­க­லையும் நிலையும் தீர்­வு­களும்

Published By: Robert

30 Oct, 2016 | 10:45 AM
image

பெண் ஒருவர் கர்ப்­பந்­த­ரித்து சிசுவைப் பிர­ச­விக்கும் காலம் வரை­யான 40 வாரங்­களில் அவள் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

ஆரம்ப கர்ப்­ப­காலம் தொடக்கம் இறுதி பிர­சவ காலம்­வரை அந்­தந்தக் காலப்­ப­கு­தியில் ஏற்­படும் உடல் மற்றும் உள உபா­தை­களைப் பொறுத்து தாங்கி அவற்­றுக்­கான தீர்­வு­களை வைத்­திய ஆலோ­ச­னை­களைப் பெற்று ஆரோக்­கி­ய­மான சிசு­வொன்றை வெற்­றி­க­ர­மாகப் பெற்­றெ­டுக்­கிறாள்.

இவ்­வா­றான கர்ப்­ப­கா­லத்தில் தற்­போது அதி­க­மான பெண்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சினை கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­படும் குருதிக் கசி­வு­க­ளாகும். அதிலும் ஆரம்ப கர்ப்ப காலப் பகு­தி­யான முதல் 28 வாரங்­க­ளுக்குள் ஏற்­படும் குருதிக் கசி­விற்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பது அவ­சியம்.

ஒரு பெண் கர்ப்­பந்­த­ரித்து அவளும் கண­வனும் மற்றும் ஏனைய குடும்ப அங்­கத்­த­வர்­களும் தமது வாரிசை மிக மகிழ்­வுடன் எதிர்­நோக்­கி­யி­ருக்கும் வேளையில் இவ்­வா­றான ஆரம்ப கர்ப்­ப­காலக் குருதிக் கசி­வுகள் அவர்­களை வெகு­வாக பாதிப்­புக்­குள்­ளாக்­கு­கின்­றன.

இவ்­வா­றான ஆரம்ப கர்ப்­ப­காலக் குருதிக் கசிவு பல்­வேறு கார­ணங்­களால் ஏற்­பட்­டாலும் பெண்கள் நினைப்­பது எது­வென்றால் கரு கலைந்து போவ­தற்­கான (Miscarriage) ஒரு அறி­கு­றியே அது­வென, 

ஆனால், இவ்­வா­றான குருதிக் கசி­வெல்லாம் கரு கலை­வ­தற்­கான (Miscarriage) அறி­கு­றி­யல்ல என்­ப­தனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகவே இவ்­வாறு ஆரம்ப கர்ப்­ப­கா­லத்­தி­லேற்­படும் குருதிக் கசி­விற்­கான பல்­வேறு கார­ணங்­க­ளையும் ஆராய்வோம்.

ஆரம்ப கர்ப்ப காலத்­தி­லேற்­படும் குருதிக் கசி­விற்­கான கார­ணங்கள்:

* இயற்­கை­யாக ஏற்­படும் கருக்­க­லையும் நிலை (Miscarriage)

* கர்ப்­பப்­பைக்கு வெளியே கரு­தங்கும் நிலை (Ectopic Pregnancy)

* கர்ப்­பப்பை வாசலில் ஏற்­படும் நோய்கள் கார­ண­மாக குருதிக் கசிவு

* கர்ப்­பப்­பையில் ஏற்­படும் திராட்சைக் குலைக்­கரு (Molar Pregnancy)

இயற்­கை­யாக ஏற்­படும் 

கரு­க்க­லையும் நிலை

கருத்­த­ரித்­துள்ள பெண் ஒரு­வரின் ஆரம்ப கர்ப்­ப­கா­லத்தில் இயற்­கை­யா­கவே குருதிக் கசிவு ஏற்­பட்டு கரு கலைந்து போகின்­றது. இந்த ஆரம்ப கர்ப்­ப­காலம் என்­பது எமது நாட்டில் முதல் 28 வாரங்கள் என வரை­ய­றுக்­கப்­பட்­டாலும் மேலை நாடு­களில் முதல் 24 வாரங்கள் என வரை­ய­றுத்­துள்­ளனர்.

இதற்குக் காரணம் 24 வாரங்­களின் பின் சிசு ஒன்று பிர­ச­விக்­கப்­பட்டால் அச்­சி­சுவைக் காப்­பாற்றி பரா­ம­ரிக்கக் கூடிய வச­திகள் அந்­நா­டு­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் எமது நாட்­டி­லுள்ள மருத்­துவ வச­திகள் ஒரு சிசு 28 வாரங்­களின் பின் பிர­ச­விக்­கப்­பட்டால் மட்­டுமே அதனைக் காப்­பாற்றப் போது­மா­ன­வை­யாக உள்­ளன.

இயற்­கை­யாக கரு கலைந்து போகும் நிலை பல்­வேறு வகை­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றன.

1)    ஆரம்ப கர்ப்ப காலத்தில் குருதிக் கசிவு ஏற்­பட்டு எவ்­வித வயிற்று வலியும் இல்­லாது உள்ளே இருக்கும் கருவும் எவ்­வித சிக்­கலும் இல்­லாது தொடர்ந்து ஆரோக்­கி­ய­மாக வளரும். இதனை ஒரு அச்­சு­றுத்தும் குருதிக் கசிவு என வகைப்­ப­டுத்­தலாம். இவ்­வா­றான குருதிக் கசி­வுகள் ஏற்­ப­டும்­போது கரு­வுக்கு ஏதேனும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­னவா என்­பது பற்றி ஒரு ஸ்கேன் (Scan) பரி­சோ­தனை மூலம் உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளலாம்.

இவ்­வா­றான நிலையில் சிசு ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­துடன் மேல­திக சிகிச்­சைகள் எதுவும் தேவை இல்லை. அத்­துடன் கர்ப்ப காலத்தை எவ்­வித சிக்­க­லு­மின்றி தொடரக் கூடி­ய­தா­கவும் இருக்கும்.

2)    இரண்­டா­வது வகையில் கரு­வா­னது தாயின் வயிற்­றி­னுள்­ளேயே இறந்து அல்­லது கலைந்து போயி­ருக்கும். பெரி­ய­ளவில் வயிற்று வலியோ அல்­லது குருதிக் கசிவோ ஏற்­ப­டாது. ஆனால் சாதா­ரண மருத்­துவ பரி­சோ­த­னைக்கு மருத்­து­வரை நாடும் போது சாதா­ரண ஸ்கேன் பரி­சோ­த­னையில் இவ்­வா­றான நிலை கண்­ட­றி­யப்­படும். இங்கு கரு வளர்ச்­சி­யுற்று வயிற்­றி­னுள்­ளேயே இறந்து போயி­ருக்கும். இதற்கு பெண்ணின் தவறோ அல்­லது அவ­ரது கண­வ­ரது தவறோ இல்லை எனும் விட­யத்தை அவர்­க­ளுக்கு எடுத்துக் கூறி அவர்­க­ளுக்குத் தேவை­யான ஆறு­த­லையும் ஆலோ­ச­னை­யையும் வழங்­கு­வது எமது கடமை. இவர்­க­ளுக்கு அடுத்த முறை நிச்­ச­ய­மாக சிறந்த கரு உரு­வாக வாய்ப்­புள்­ளது. இவ்­வா­றான கருக்­க­லையும் நிலையை அமை­தி­யான கருக்­க­லைவு (Silent Miscarriage) என அழைப்போம். 

3)    மூன்­றா­வது வகை­யான கருக்­க­லையும் நிலை மிக முக்­கி­ய­மான நிலை. இதன்­போது அதி­கூ­டிய வயிற்­று­வலி மற்றும் குருதிப் போக்கு என்­ப­வற்­றுடன் அவ­ச­ர­மாக வைத்­தி­ய­சா­லைக்கு வரு­வார்கள். இதன்­போது கரு கலைந்து சிறு சிறு துண்­டு­க­ளா­கவும் இரத்­த­மா­கவும் வெளி­யேறும். இந்­நி­லையில் இவர்­க­ளது வயிற்­று­வலி மற்றும் குருதிப் போக்­கிற்கு அவற்றை கட்­டுப்­ப­டுத்தும் சிகிச்­சைகள் வழங்­கு­வது அவ­சியம். இவ்­வ­கையை Incomplete Miscarriage என அழைப்போம். 

4) சில வேளை­களில் கலைந்­து­போன கரு துண்­டு­க­ளாக தாமா­கவே இரத்தப் போக்­குடன் வெளி­யேறி இறு­தியில் மிகுதி எதுவும் கர்ப்பப் பையில் தங்­காமல் பூர­ண­மாக வெளி­யேறி விடும். இவர்­க­ளுக்கு மேல­திக சிகிச்­சைகள் எதுவும் தேவையில்லை.

இயற்­கை­யாக கரு கலைந்து 

போவ­தற்­கான கார­ணங்கள்

இயற்­கை­யாக கரு கலைந்து போதல் ஒரு பொது­வான பிரச்­சினை. கர்ப்­பந்­த­ரித்த 5 பெண்­களை எடுத்தால் அதில் ஒரு­வ­ருக்கு இவ்­வாறு கர்ப்பம் கலைந்து போகும் நிலை ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

இதற்குக் கார­ண­மாக இருப்­பது உரு­வான கருவின் நிற மூர்த்­தங்­களின் அதா­வது பரம்­பரை அல­கு­களின் பல­வீனமும் குறை­பா­டுமே ஆகும். 

இது சற்று வயது கூடிய பெண்­களில் கருத்­த­ரிக்கும் போது கூடு­த­லாக ஏற்­பட வாய்ப்­புள்­ளது. ஏனைய கார­ணங்­க­ளாக நுண்­ணுயிர்த் தொற்று கர்ப்பப்பையின் உட்­கட்­ட­மைப்­பு­களில் குறை­பா­டுகள், நீரி­ழிவு நோய், சில மருந்துப் பதார்த்­தங்கள் என்­பன அமையும்.

இவ்­வாறு இயற்­கை­யான கருக்­க­லை­தலை உறு­திப்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­படும் பரி­சோ­த­னைகள்:

இதற்கு ஸ்கேன் (Scan) பரி­சோ­தனை மற்றும் குருதி வர்க்கப் பரி­சோ­தனை என்­பன அவ­சியம். ஒரு முறை கரு கலைந்­த­வர்­களில் அதற்­கான கார­ணத்தை கண்­ட­றியும் பரி­சோ­தனை மேற்­கொள்­வ­தில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் கரு கலைந்தால் இதற்­கான பின்­னணி கார­ணி­களை கண்­ட­றியும் விசேட இரத்த மற்றும் ஹோர்மோன் பரி­சோ­த­னைகள் அவ­சியம்.

இயற்­கை­யான கரு கலைந்­த­வ­ருக்­குரிய தேவை­யான சிகிச்­சைகள்:

கரு ஒன்று கலைந்­து­விட்­ட­தா­கவோ அல்­லது இறந்­து­விட்­ட­தா­கவோ உறு­திப்­ப­டுத்­திய பின்னர் இதற்­கான சிகிச்­சைகள் 3 வழி­களில் மேற்­கொள்­ளப்­படும்.

*  இவர்கள் இரு வாரங்­க­ளுக்கு எவ்­வித சிகிச்­சை­களும் இல்­லாது காத்­தி­ருக்­கும்­போது உள்ளே உள்ள கலைந்துபோன கரு தானாகவே மாதவிடாய் போன்று இரத்தப் போக்குடன் வெளியேறக்கூடிய வாய்ப்புள்ளது. இவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் தேவையில்லை.

* அடுத்த சிகிச்சை முறை இவ்வாறு கரு கலைந்து போனவர்களுக்கு சிலவகை மருந்துகளை வழங்கி அவற்றை கர்ப்பப் பையிலிருந்து வெளியேற்ற முடியும். இம்முறையும் கூடுதலானவர்களுக்கு வெற்றியளிக்கும்.

* இறுதியாகவுள்ள சிகிச்சை முறை வயிறு கழுவுதல் எனப்படும். இது சத்திர சிகிச்சை முறையில் கலைந்துள்ள கருவின் பாகங்களை முற்றாக அகற்றுதல் ஆகும். 

இம்முறை ஒரு சத்திர சிகிச்சை முறையாக இருப்பதனால் இதனை இறுதித் தீர்வாக முன்வைப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29