ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று

Published By: Vishnu

06 Jun, 2022 | 10:05 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழட கூடவுள்ளது.

கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5.30 க்கு கொழும்பு - டார்லி வீதியில் அமைந்துள்ள சு.க. தலைமையகத்தில் மத்திய குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன் போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

21 ஆவது திருத்த்திற்கு சு.க. முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , மீண்டும் இன்றையதினம் இது குறித்த கலந்தாலோசனைகள் இடம்பெறவுள்ளதாக சு.க. சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

அத்தோடு நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்காது , மக்கள் நலன் சார் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சுதந்திர கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்தது.

இது தொடர்பில் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் ஊடகவியலாளர் மாநாட்டின் ஊடாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

எனினும் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் இந்த தீர்மானத்திற்கு முரணாக கட்சியின் உயர் பீடத்திற்கு கூட அறிவிக்காமல் அமைச்சுப்பதவிகளை ஏற்றுள்ளனர்.

எனவே இவ்வாறு இந்த அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்போர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பிலும் இன்றைய மத்திய குழு கூட்டத்தில் ஆழமாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58