11 சிறுவர்கள் போஷாக்கு குறைபாட்டால் பாதிப்பு - குழந்தை நல வைத்திய நிபுணர் தகவல்

Published By: Digital Desk 5

06 Jun, 2022 | 01:08 PM
image

(எம்.எம். சில்வெஸ்டர்)

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையிலுள்ள சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனையின்போது 11 சிறுவர்கள் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக  சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை  நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு தேவையான போதியளவு ஊட்டச்சத்து  இல்லாதமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"நாங்கள் மருத்துவமனையில் 53 குழந்தைகளை பரிசோதித்தோம், அவர்களில் பாதி பேர் ஆபத்தான நிலையில் இருந்தனர். கடந்த காலத்தில் நாங்கள் மேற்கொண்டிருந்த சில அவதானிப்புகளின் காரணமாக நாங்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு விரும்பினோம்.

இங்கு நம் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளான கார்போஹைட்ரேட், புரதச் சத்து, கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் இல்லாததாகும். இவை குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் உணவு வேளைகளின்போது ச்சீஸ்,பட்டர் போன்றவற்றை விடவும் பால், முட்டை, அரிசி மற்றும் முருங்கைக்காய் போன்றன  கொடுப்பதுடன், பச்சை இலைக் காய்கறிகளையும்  சேர்க்க வேண்டும். மேலும்  குழந்தைக்கு மஞ்சள் காய்கறிகளையும் கொடுங்கள்.

மரவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, சீனிக் கிழங்கு போன்றவற்றையும் குழந்தைகளுக்கு கொடுங்கள். சீனிக் கிழங்குகளில் அதிகளவான சத்துக்கள் உள்ளன. மேலும் குழந்தைகளுக்கு சோளம், வாழைப்பழம், பப்பாளி, நாமினாங்கு போன்றவற்றையும்  ‍கொடுப்பது நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36