பாகிஸ்தானில் கர்ப்பிணிப்பெண் மீது கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்

Published By: Digital Desk 3

06 Jun, 2022 | 12:51 PM
image

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில்  கர்ப்பிணிப் பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தினத்தன்று ஐந்து பேர் கொண்ட குழு கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து கணவரை அடித்து கட்டிப்போட்டு விட்டு, குறித்த  பெண்ணை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் தானே வைத்தியசாலைக்குச் சென்று தனக்கு நேர்ந்த அவலத்தை தெரிவித்துள்ளார். அதனை அடுத்து வைத்தியசாலை ஊழியர்கள் சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், கர்ப்பிணிப் பெண் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, அவரது இரத்த மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்காக லாகூருக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்க பஞ்சாப் பொலிஸ் சிறப்புக் குழுக்களை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெண்கள் மீததான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம், கராச்சியில் ஓடும் ரயிலில் 25 வயது பெண் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களில் 2,439 பெண்கள் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளதோடு, "குடும்ப கௌரவம்" என்ற பெயரில் 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பெப்ரவரியில் பஞ்சாப் தகவல் ஆணையம் வழங்கிய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் (2015-21) 22,000 க்கும் மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளன என பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் (HRCP) அண்மைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின் படி, பாலின சமத்துவக் குறியீட்டில் 156 நாடுகளில் பாகிஸ்தான் 153 ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52