நியூஸிலாந்தை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

Published By: Digital Desk 5

06 Jun, 2022 | 10:42 AM
image

(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்துக்கு எதிராக லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (05) 4 நாட்களில் நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் இங்கிலாந்து அபார வெற்றியீட்டியது.

ENG vs NZ, 1st Test, Day 1 Highlights: England 116/7 at Stumps after  bundling New Zealand out for 132 - Sportstar

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

இரண்டு அணிகளாலும் முதலாவது இன்னிங்ஸில் குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இந்தப் போட்டியில் 4ஆவது இன்னிங்ஸில் 277 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜோ ரூட் குவித்த ஆட்டமிழக்காத அபார சதம், பென் ஸ்டோக்ஸ் பெற்ற அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் வெற்றி இலக்கை அடைந்தது.

5ஆவது விக்கெட்டில் பென் ஸ்டோக்ஸுடன் 90 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜோ ரூட், பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் பென் போக்ஸுடன் 120 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை சுலபமாக்கினார்.

புதிய அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், புதிய தலைமைப் பயிற்றுநர் ப்றெண்டன் மெக்கலம் ஆகியோரின் கீழ் புதிய டெஸ்ட் சகாப்தத்தில் கால் பதித்துள்ள இங்கிலாந்து, அவர்களது முதல் முயற்சியிலேயே வெற்றியீட்டியது பாராட்டுக்குரியதாகும்.

England vs New Zealand, 1st Test, Day 2 Highlights: Daryl Mitchell, Tom  Blundell's Unbeaten 180-Run Stand Puts New Zealand On Top vs England |  Cricket News

பரபரப்பு எதுவும் இல்லாமல் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி நான்கு நாட்களுக்கு முடிவுக்கு வந்தது.

இப் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் 150 ஓட்டங்களை எட்டவில்லை. 2ஆவது இன்னிங்ஸில் 2 அணிகளும் 250க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதுடன் இரண்டு அணிகளிலும் ஒருவர் சதம் குவித்திருந்தார்.

நியூசிலாந்து சார்பாக டெரில் மிச்செலும் இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட்டும் சதம் குவித்தனர்.

டெஸ்ட் போட்டி ஒன்றில்  ஜோ ரூட்   4ஆவது இன்னிங்ஸில்  குவித்த முதலாவது   சதம், டெஸ்ட் போட்டிகளில் அவரது 26ஆவது சதமாக அமைந்தது.

இதனிடையே டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.  இதன் மூலம் டெஸ்ட்  போட்டிகளில் 10,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர்கள் பட்டியிலில் 14ஆவது வீரராக ஜோ ரூட் இடம் பிடித்தார்.    அத்துடன் அலஸ்டெயார் குக்குக்கு அடுத்ததாக 10,000 ஓட்டங்களைக் குவித்த இரண்டாவது இங்கிலாந்து வீரரானார்.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: 132 (கொலின் டி க்ராண்ட்ஹோம் 42, டிம் சௌதீ 26, மெத்யூ பொட்ஸ் 13 - 4 விக்., ஜேம்ஸ் அண்டர்சன் 66 - 4 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 141 (ஸக் க்ரோவ்லி 43, அலெக்ஸ் லீஸ் 25, உதிரிகள் 22, டிம் சௌதீ 55 - 4 விக்., ட்ரென்ட் போல்ட் 21 - 3 விக்., கய்ல் ஜேம்சன் 20 - 2 விக்.)

நியூஸிலாந்து 2ஆவது இன்: 285 (டெரில் மிச்செல் 108, டொம் ப்ளண்டல் 96, மெத்யூ பொட்ஸ் 55 - 3 விக்., ஸ்டுவர்ட் ப்றோட் 76 - 3 விக்., ஜேம்ஸ் அண்டர்சன் 57 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 277 ஓட்டங்கள்) 279 - 5 விக். (ஜோ ரூட் 115 ஆ.இ., பென் ஸ்டோக்ஸ் 54, பென் போக்ஸ் 32 ஆ.இ., கய்ல் ஜேம்சன் 79 - 4 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49