தனியார் பஸ் சேவைகள் 35 சதவீதமாக மட்டுப்படுத்தப்படும் - அகில இலங்கை தனியார் பஸ் சங்கம்

Published By: Vishnu

05 Jun, 2022 | 09:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடுதழுவிய ரீதியில் இன்றைய தனியார் பேரூந்துகள் 35 சதவீதம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படும்.

பேருந்து சேவை மட்டுப்பாட்டினால் பொதுபயணிகள் எதிர்க்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வலுசக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பேரூந்து சேவை மட்டுப்பாடு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேரூந்துகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு வலுசக்தி அமைச்சிடம் பலமுறை உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுத்தோம்.

அரச பேரூந்துகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்கி நாடு தழுவிய ரீதியில் அரச பேரூந்து போக்குவரத்து சேவையினை முன்னெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

தனியார் பேருந்துகள் ஒரு பயணத்தை மேற்கொள்வதற்கு தேவையான டீசலை பெற்றுக்கொள்வது பெரும் போராட்டமாக உள்ளது.

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை நாடுதழுவிய ரீதியில் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவையினை இன்று முதல் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைய மன்னார், வவுனியா, கம்பஹா, தென்மாகாணம், கேகாலை, கண்டி, பொலன்னறுவை, பதுள்ளை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 10சதவீதம் தொடக்கம் 15 சதவீதமளவில் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.கொழும்பு மாவட்டத்தில் 25 சதவீதமளவில் பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

பெரும்பாலான பேரூந்துகள் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்படும்.

பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பொது பயணிகள் எதிர்க்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வலுசக்தி அமைச்சு பொறுப்புக் கூற வேண்டும். எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் தனியார் பேரூந்து சேவையினை விரிபுப்படுத்திய வகையில் முன்னெடுக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19