ஜனநாயகத்தை நிலைநாட்டக்கோரி மீண்டும் ஜெனீவா செல்லத்தயாராகிறது கூட்டுஎதிரணி

Published By: MD.Lucias

29 Oct, 2016 | 03:50 PM
image

(ஆர்.ராம்)

பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டக்கோரி ஜெனீவா செல்வதற்கு கூட்டுஎதிரணி தயாரகிவருகின்றது. அதன்பிரகாரம் கூட்டுஎதிரணி அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திலும், பொதுநலவாயநாடுகளின் பாராளுமன்ற ஒன்றியத்திலும் முறைப்பாடுகளை பதிவு செய்யவதற்குரிய வேலைத்திட்டங்களை எடுத்து வருகின்றது.

இதுகுறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்த்தன தெரிவித்ததாவது,

52மக்கள் ஆணை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கூட்டு எதிரணியாக பாராளுமன்றத்தில் இருக்கின்றோம். தேசிய அரசாங்கம் உருவக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட வரவு செலவுத்திட்டங்களுக்கு மக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு எதிர்த்து வாக்களித்தே வந்துள்ளோம்.

இந்நிலையில் 52பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக இருகிகின்றபோதும் எம்மை எதிர்க்கட்சியாக அங்கீகாரிக்க தற்போதைய ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர். கூட்டு எதிரணியினைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களினது ஜனநாயக உரிமைகள் மறுதலிக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பார்க நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம். பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

எனினும் நியாயம் கிடைப்பதாக இல்லை. இந்நிலையில் கடந்த காலத்தில் நானும், பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகம்மன்பில, டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜெனீவாவிலுள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாட்டை செய்திருந்தோம்.

எனினும் எமது அணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறும் செயற்பாடுகள் தற்போதும் காணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக பாராளுமன்றத்தில் எமது அணி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு முயல்கின்றவேளையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. சரியான பதிலளிப்புக்கள் இடம்பெறுவதில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56