இதுவே ஆரம்பம் - மக்கள் இரண்டுவேளை மாத்திரம் உணவுண்ணும் நிலையேற்படலாம் - பிரதமர்

Published By: Rajeeban

04 Jun, 2022 | 11:27 AM
image

நான் பிரதமருக்கான கடமைகளை மாத்திரம் நிறைவேற்றவில்லை தீயணைப்பு வீரரின் பணிகளையும் செய்கின்றேன்

----------------

அரசமைப்பின் 21 வது திருத்தம் குறித்து கட்சிதலைவர்கள் பொதுவான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வஜனவாக்கெடுப்பிற்கான எந்த ஏற்பாட்டினையும் தவிர்க்கும் விதத்தில் அது திருத்தப்படும் என தெரிவித்துள்ள பிரதமர் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் மோசமடைவதால் இது மாத்திரம் போதுமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போதுதான் நெருக்கடியின் ஆரம்பத்தில் உள்ளது மோசமான விடயங்கள் இனிமேல்தான் வரப்போகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது எரிபொருளிற்கான வரிசைகள் இல்லை என தெரிவித்துள்ள பிரதமர் நான் பிரதமருக்கான கடமைகளை மாத்திரம் நிறைவேற்றவில்லை தீயணைப்பு வீரரின் பணிகளையும் செய்கின்றேன் என்பது உங்களில் பலருக்கு தெரியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்

இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் கப்பல்களிற்கு கொடுப்பதற்காக நான் 40 மில்லியன் டொலர்களை தேட வேண்டியநிலையில் உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பொருளாதாரத்தை அழித்துவிட்டோம்,வங்கிகளிற்கு டிரில்லியன் ரூபாய்களை செலுத்தவேண்டிய அரசஸ்தாபனங்கள் உள்ளன,நஸ்டத்தில் இயங்கும் திணைக்களங்கள் அரச ஸ்தாபனங்கள் உள்ளன, முன்னுரிமை பெறாத இலங்கைக்கு நன்மையளிக்காத திட்டங்கள் உள்ளன என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்திற்கான போதியளவு உரங்கள் இல்லாததால் செப்டம்பர் ஒக்டோபர் வரை நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பெரும்போகத்திற்கு  உரங்கள் கிடைத்தால் அடுத்த வருடம்பெப்ரவரி மாதமளவில் நாங்கள் பெப்ரவரி மாதமளவில் தன்னிறைவு நிலையை எட்டுவோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் மூன்று நேரம் உணவு உண்ணமுடியாத  -ஒரு நாளைக்கு இரண்டு நேரம் மாத்திரமே மக்கள் உணவு உண்ணும் நிலை உருவாகும் என பிரதமர் எச்சரித்துள்ளார்.

அரசாங்கம் நட்புநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் எங்களிற்கு வெளியிலிருந்து சில பில்லியன் டொலர்கள் அவசியம் இல்லாவிட்டால் நாடு எதிர்காலம் இல்லாதநிலைக்கு தள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் நிராகரித்த மக்களை நோக்கி நாங்கள் மீண்டும் நேசக்கரத்தை நீட்டவேண்டும்,1952 முதல் ஜப்பான் எங்களின் நேசநாடாக காணப்படுகின்றது ஆனால் கடந்த சில வருடங்களில் இடம்பெற்ற விடயங்களால் அது காயப்பட்டுள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகின் எந்த நாடு 3 பில்லியன் டொலர்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல் நன்றி சொல்லாமல் நிராகரிக்கும் என பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிஸ்டவசமாக இந்தியா உதவ முன்வந்துள்ளது ஏனைய நாடுகளும் உதவுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா உதவி வழங்க முன்வந்தது ஆனால் அரசாங்கத்தை சேர்ந்த யாரோ  குறித்து அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் -அதனை பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ள இலங்கை பிரதமர் நாடு மேற்கை நோக்கி பார்வையை திருப்பவேண்டியுள்ள போதிலும் மேற்குலகம் துரதிஸ்டவசமாக பணவீக்கம்,உக்ரைன் ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது தவறுகளிற்காக மன்னிப்பு கோருவதும் உதவிகளிற்காக நண்பர்களை உருவாக்குவதும் அவசியம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையை இரண்டு பிரச்சினைகள் பாதிக்கின்றன என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க ஒன்று ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது, அது பொருளாதார பிரச்சினை என குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நெருக்கடி உக்ரைன் யுத்தத்தின் சர்வதேச தாக்கம் இலங்கை அதன் ஆரம்பத்தினை மாத்திரம் தற்போது அனுபவிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜப்பான் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர்  முன்னர் இலங்கை நெருக்கடியால் பாதிக்கப்பட்டவேளை ஜப்பானே உதவிக்கு வந்தது,மேலும் உதவிகளை பெறுவதற்காக ஜப்பானை நோக்கி இலங்கை தனது நேசக்கரங்களை நீட்டவேண்டும்,என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59