(ஜீவா சதாசிவம்)

இன்­றைய தக­வல்­யுகம்  நாளுக்கு நாள் நமது 'மூளை' யை  சுய­மாக இயங்­க­வி­டாமல் செய­ழி­லக்கச் செய்து வரு­கின்ற இக்­கா­லக்­கட்­டத்தில், வாசிப்பை வலி­யு­றுத்­து­மு­க­மாக, எல்லோர் மத்­தி­யிலும் வாசிப்பை வலுப்­ப­டுத்தும் முக­மாக நாட­ளா­வி­ய­ரீ­தியில் கடந்த செப்­டெம்பர், ஒக்­டோபர் மாதங்­களில் பல்­வேறு கலந்­தாய்­வுகள், செய­ல­மர்­வுகள் நடை­பெற்­ற­தோடு பல்­வேறு பத்­தி­களும் பதி­வுக்குள்­ளா­னதை அவ­தா­னிக்க முடிந்­தது. 

எல்­லோரும் வாசிப்பைப் பற்றி யோசிக்­கின்றோம். எல்­லோரும் வாசித்து கொண்­டுதான் இருக்­கின்­றார்கள். ஆனால், வாசிப்பின் மூலம் பூரண மனி­த­னா­கு­கின்­றோமா? இவ்­வாறு ஒரு கேள்வி வரு­மானால்,  இதனை மீளாய்வு செய்ய வேண்­டிய தேவை­யுள்­ளது. எல்­லோரும் வாசித்துக் கொண்­டுதான் இருக்­கி­றார்கள். இது மன­நி­லையில் நிகழ்ந்­து­கொண்டு இருக்­கி­றது. கடைப்­பெயர் பலகை, வீதிப்­பெயர், விளம்­ப­ரங்கள் எல்­லாமே வாசிப்­புக்கு உள்­ளாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. அதனால் பயனும் நிக­ழந்­து­கொண்­டி­ருக்­கி­றது. இப்­போ­தெல்லாம்  பர­வ­லாக நிகழ்ந்து கொண்­டி­ருக்கும் 'வாசிப்பு', தக­வலை அறிந்து கொள்­வ­தற்­காக இருக்­கின்­றதே தவிர அறிவைத் திரட்டிக் கொள்­வ­தற்­கான நோக்கம் கொண்­ட­தாக இருக்­கின்­றதா எனும் கேள்வி எழு­கின்­றது.  அவ­ச­ர­மாக சில தக­வல்­களை தெரிந்­து­கொண்டு அதன் மூலம் தான் அறி­வா­ளி­யாக நின்று தீர்ப்பு வழங்கும் 'முகநூல்' வாசிப்­புக்கு நமது வாசிப்பு கலா­சாரம் முடக்­கப்­பட்டு வரு­கி­றது. வாசிப்பு குறைந்­து­விட்­டது  என்­பது தவறு. அது பர­வ­லாக்­கப்­ப­டி­ருக்­கின்­றது. இதுதான் உண்மை. 

Book இல் வாசித்துக் கொண்­டி­ருந்­த­வர்கள், face book இல் வாசித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். Paper வாசித்­த­வர்கள் what's app வாசித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.  அறிவைத் தர­வேண்­டிய வாசிப்­புகள் தக­வலைத் தரும் வாசிப்­பு­க­ளாக பர­வ­லாக்­கப்­பட்டு வரு­கின்­றன. கண்­டதை கற்க பண்­டி­த­னாவான் என்­கி­றார்கள். கண்­ட­தையும் கற்­று­வி­டு­வதால் மனிதன் முழு மனிதன் ஆகி­வி­டு­கி­றானா எனும் கேள்வி வரு­கி­றது

இக்­கேள்­வியை முன்­னி­றுத்தி தமது வாசிப்பு கலா­சா­ரத்தை மீளாய்வு செய்யும் போது, இவ்­வி­டத்தில் 'மறு­வா­சிப்பு'  பற்றி பேச வேண்­டிய தேவை ஏற்­ப­டு­கின்­றது. வாசிப்பு என்­பது என்ன? வாசிப்பு என்­ற­வுடன் ஒரு பிர­தியை உச்­ச­ரித்து வாசிப்­பது என்­பது பற்றி யோசிக்­கிறோம்.ஆனால், உண்­மையில் வாசிப்பு என்­பது அது­வல்ல.  

இப்­போ­தெல்லாம் 'மறு­வா­சிப்பு' எனும் சொல் பிர­ப­ல­மா­க­வுள்­ளது. மறு­வா­சிப்பு என்­பது ஏற்­க­னவே வாசித்த ஒரு பிர­தியை திரும்­பவும் வாசிப்­பது அல்ல. 

ஒரு பிர­தியை வாசித்து தான் பெற்றுக் கொண்ட அறி­தலை அப்­ப­டியே ஏற்றுக் கொள்­வது என்­பதும், அல்­லாமல் அவ்­வாறு வாசித்­த­வற்றை தனது புற அறி­தல்­க­ளுடன் ஒப்­பு­நோக்கி தனக்­குள்ளே விவா­தித்து ஏற்­க­னவே தான் வாசித்த பிர­தியை மீளவும் புரிந்­து­கொள்ள முற்­படும் போது, முத­லா­வது வாசிப்பில் கிடைத்த புரிதல் ஒன்றில் இருந்து வேறு­பட்ட கருத்து நிலை ஒன்றை அதே பிர­தியில் இருந்து பெற முடி­யு­மென்றால் அதுவே மறு­வா­சிப்பு என்­றா­கி­றது. 

 எந்த ஒரு பிர­தி­யையும் எவர் மறு­வா­சிப்­புக்கு உட்­ப­டுத்­து­கி­றாரோ அந்த வாசிப்­புதான் 'ஒரு மனி­தனை முழு மனி­த­னாக்கும்' வாசகர் பல­ருக்கு இந்த மறு­வா­சிப்பு இல்லை. அத­னால்தான் வாசிக்கும் எல்­லோரும் முழு­மை­யான மனி­தர்கள் இல்லை. எனவே தான் 'வாசிப்பு ஒரு மனி­தனை முழு­ம­னி­த­னாக்கும்' என்­பது இன்னும் இந்த உல­கத்தில் நிக­ழா­ம­லேயே இருக்­கி­றது.

 எனவே வாசிப்­ப­தோடு மாத்­திரம் நின்று விடாமல் வாசித்த விட­யத்தை 'மறு­வா­சிப்பு' செய்­வது இங்கு அவ­சி­யப்­ப­டு­கி­றது. ஒரு தடவை வாசித்த நூலை/பிர­தியை கூட திரும்­பவும் வாசிக்கும் போது முதல் முறை­யாக கிடைத்த அறிவை விட புதிய புரிதல் கிடைக்கும். நாளாந்தம் வாசிக்க வேண்டும் என்­ப­தற்­காக வெறு­மனே காலையில் இருந்­து­மாலை வரை வாசிக்­காமல், வாசிப்பு என்­பதை ஒரு உணர்­வா­கவும் உழைப்­பா­கவும் எடுத்­துக்­கொண்டு அதனை மறு­வா­சிப்பு என்­ப­த­னூ­டாக அர்த்­தப்­ப­டுத்­தப்ப­ட­ வே­ண்டும். அத்தகைய வாசிப்பின் போது பெற்­றுக்­கொண்ட 'தக­வல்கள்' ஒரு மனி­த­னுக்குள் எப்­பொ­ழுது 'அறி­வு­பூர்­வ­மாக' அடங்­கு­கின்­றதோ அப்­போதே ஒரு மனிதன் முழு மனி­த­னா­வான்.