ஷாருக்கானின் 'ஜவான்'

Published By: Digital Desk 5

03 Jun, 2022 | 04:59 PM
image

முன்னணி பொலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'ஜவான்' என பெயரிடப்பட்டு, இதற்கான பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் :ஜவான்'.

இதில் நடிகர் பொலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் நடிகர் ஷாருக்கானின் சொந்த பட நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் 'ஜவான்' படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கத் தயாராக இருக்கிறார்கள்.

தென்னிந்திய நட்சத்திர நடிகர்களுக்கு வணிக ரீதியான வெற்றியை வழங்கி அசத்திய இயக்குநர் அட்லி முதன்முறையாக பொலிவுட் நட்சத்திரத்தை முன்னிறுத்தி பான் இந்திய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் வெளியாகி வணிகரீதியாக உலக அளவில் வசூல் சாதனையை நிகழ்த்த வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37