10 ஆசிய வெளியுறவு அமைச்சர்களை டெல்லிக்கு அழைக்கிறது இந்தியா

Published By: Digital Desk 5

03 Jun, 2022 | 11:51 AM
image

இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக தென்கிழக்கு ஆசியாவிற்கு தனது எல்லையை விரிவுபடுத்தவும், பிராந்தியத்தில் சீனாவின் பாரிய ஊடுருவல்களுக்கு மத்தியில் சாத்தியமான பங்காளியாக மாறும் வகையிலும் இம் மாதம் 15-17 திகதிகளில் அனைத்து 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் சிறப்பு கலந்துரையாடல்களை இந்தியா முன்னெடுக்க உள்ளது.

30 ஆண்டுகால இந்திய –ஆசிய  கூட்டாண்மை மற்றும் ஆசியாவுடனான அதன் மூலோபாய கூட்டுறவில் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 10 வெளியுறவு அமைச்சர்களையும் ஒரே மேடையில் சந்தித்து கலந்துரையாடுகின்றமை இதுவே முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

டோக்கியோவில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பில் முதலீடுகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து கவனத்தில் கொள்ளவும் இந்த சந்திப்பு ஒரு தளத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய -ஆசிய கூட்டாண்மைக்கான மூன்று சாத்தியமான பகுதிகளாக சுகாதார பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமையான நிலையான வளர்ச்சி போன்ற துறைகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. 

கொவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து நிலையான பொருளாதார மீட்சியை அடைவதற்காக இந்தியா மற்றும் ஆசிய உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாக தடுப்பூசிகள், திறமையான மற்றும் நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் வெளிப்பட்டுள்ளதாக பிராந்திய வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா, புருனே தருஸ்ஸலாம், இந்தோனேஷியா, ஜப்பான், கொரியா குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் கடந்த வாரம் டோக்கியோவில் இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு குறித்து ஒரு திறந்த பேச்சுக்கள் வெற்றிக்கண்டுள்ளன. 

இவ்வாறானதொரு நிலையில் இந்தியா 10 ஆசிய நாட்டு வெளிவிவகார அமைச்சர்களை அழைத்து கலந்துரையாடுகின்றது. 

இந்த கலந்துரையாடல்களுக்கு மியான்மரின் இராணுவ ஆட்சிக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளியுறவு அமைச்சரை இந்தியா அழைக்க வில்லை.  

அதற்கு பதிலாக மியான்மர் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரத்துவத்தைப் சந்திப்பிற்கு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17