புத்தொளி  வீசும் தீப   திருநாளாக அமையட்டும்  

Published By: MD.Lucias

29 Oct, 2016 | 09:35 AM
image

இருளால் கொண்டுவரப்படும் தீமைகளாலும்  இழப்புகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு ஒளியைத் தேடிச்சென்ற மனிதன் தீமைகளுக்குப்  பதிலாக நன்மையைும் அறியாமைக்கெதிராக அறிவையும் இழப்புகளுக்கு எதிராக நம்பிக்கையையும்  வெற்றிகொள்ளும்  உலக உண்மையே தீப ஒளியில்  பிரகாசிக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த  வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு மோதல்களும் அதனால் சமூகத்தின் மீது  படர்ந்திருந்த  இருளும்  நீங்கிய இன்றைய  சூழ்நிலையானது எமது சமூகத்தை  இருளிலிருந்து  ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச்செல்லக் கிடைத்த  பெறுமதியான வாய்ப்பாகுமென கருதுகிறேன்.

ஒரு நாட்டினதும் சமூகத்தினதும்  சுபீட்சமானது அந்த நாட்டில் நிலவுகின்ற  சமாதானம் மற்றும்  சகவாழ்வினாலேயே  உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே அனைவரது மனங்களிலும் சகவாழ்வும் நல்லிணக்கமும்  மிளிர வேண்டும்  என்பதே  இன்றைய தீபாவளி தினத்தில் எனது பிராத்தனையாகும்.

ஐக்கியமென்பது இன்றைய  உலகின்  இருப்புகளுக்குத் தேவையான அடிப்படையான நிபந்தனையாகவுள்ள பின்னணியில்,  நாம் அனைவரும் ஆழமான பிணைப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியமானதாகும்.

 உலக வாழ் இந்துக்களினால்   வெகு  சிறப்பாக கொண்டாடப்படும் இத்தீபத்திருநாள் அனைவருக்கும் மனநிறைவையும்   மகிழ்ச்சியையும்  ஏற்படுத்தும்  ஒரு பண்டிகையாகவும் அவர்களது வாழ்வில் புத்தொளி  வீசும் தீபத் திருநாளாகவும அமைய வாழ்த்துகிறேன் 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01