நாட்டின் நெருக்கடிகள், 21 ஆவது திருத்தம் தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இராஜதந்திரிகளுக்கு விளக்கம்  

Published By: Digital Desk 4

02 Jun, 2022 | 09:57 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பிலும் , அதிலுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.

Articles Tagged Under: ஜீ.எல். பீரிஸ் | Virakesari.lk

கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் வியாழக்கிழமை (2) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , இலங்கையில் தற்போது காணப்படும் நிலைமை மற்றும் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மின்வெட்டு போன்ற அழுத்தமான பிரச்சினைகளை உள்ளடக்கிய அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பான நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முனனெடுத்த நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்த அமைச்சர், தேவைப்படும் நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு தூதுவர்களை கேட்டுக் கொண்டார். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பிலும் , அதிலுள்ள முக்கிய அம்சங்களையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இராஜதந்திர உறுப்பினர்களின் பங்கேற்பிற்காக நன்றி தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் குறிப்பாக சவாலான ஒரு கட்டத்தில் தமது ஆதரவையும் நல்லெண்ணத்தையும் வழங்குமாறு தூதுவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் சுருக்கமான விளக்கங்களை முன்வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். இந்த மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவும்  இணைந்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46