பிரதமரின் விசேட உரையையடுத்து பாராளுமன்றில் குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணை சமர்பிக்கப்படும்

Published By: Digital Desk 3

02 Jun, 2022 | 04:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் உத்தேச அரசியலமைப்பு 21ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்கிழமை (07) பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார். அத்துடன் பிரதமர் நிதியமைச்சர் என்ற ரீதியில் நிதி ஒதுக்கீட்டுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டு பிரேரணையை செவ்வாய்க்கிழமை சபையில் சமர்ப்பிப்பார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரை மீதான விவாதம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறும். 

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை தொடர்ந்து காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவிற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் அனுதாப பிரேரணையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பிலான தெரிவு குழு கூட்டம் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு மற்றும் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை தொடர்பில் சமூகத்தின் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் தினத்தன்று பாராளுமன்ற சிற்றுண்டிசாலையில் எத்தனை உறுப்பினர்கள் பகலுணவை பெற்றுக்கொள்கிறார்கள். அதற்கு செலவாகும் நிதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் எத்தனை பேர் பகலுணவை பெற்றுக்கொள்கிறார் அதற்கு செலவாகும் நிதி தொடர்பிலான உண்மையான செலவுகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார உட்பட பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றில் விசேட உரையாற்ற  தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

பிரதமரின் விசேட உரை மீதான விவாதம் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியினர் வலியுறுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்,புதன் மற்றும் வியாழன் ஆகிய  மூன்று நாட்களும் பிரதமரின் உரை மீதான விவாதமும்,நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பிலும் முழு நாள் விவாதத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த மாதம் 09ஆம் திகதி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தொடர்ந்து மரணமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவிற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனுதாப பிரேரணையை முன்வைக்க தீர்மானிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37