இலங்கை - நேபாளத்திற்கிடையிலான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு

Published By: Digital Desk 4

01 Jun, 2022 | 11:47 PM
image

(நெவில் அன்தனி)

உஸ்பெகிஸ்தானில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள AFC ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில் விளையாடுவதற்காக கத்தாரில் பயிற்சிபெற்றுவரும் இலங்கை, திங்கட்கிழமை (31) நடைபெற்ற நேபாளத்துடனான சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியை 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

அப் போட்டியில் இலங்கை முதலில் கோல் போட்டபோதிலும் உபாதையீடு நேரத்தில் போட்ட பெனல்டி  கோல்   மூலம் நேபாளம் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த தலைமைப் பயிற்றுநர் அண்டி மொறிசனிடம் கத்தார், அஸ்பயர் பயிற்சியகத்தில் பயிற்சிபெற்றுவரும் இலங்கை அணி, நேபாளத்துடன் திங்கட்கிழமை இரவு சிநேகபூர்வ போட்டியில் விளையாடியது.

மொறிசன் பயிற்றுநராக பதவியேற்ற 2 வாரங்களில் இலங்கை கால்பந்தாட்ட வீரர்களின் கால்பந்தாட்ட ஆற்றல் வெளிப்பாட்டில் 75 வீத முன்னேறத்தைக் காணக்கூடியதாக இருப்பதாக கத்தாரில் இருந்து உதவிப் பயிற்றுநர் இராஜமணி தேவசகாயம் தெரிவித்தார்.

தலைமைப் பயிற்றுநரினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐரோப்பிய கால்பந்தாட்ட வியூகங்கள், குறிப்பாக தடுத்தாடும் உத்திமுறையை இலங்கை வீரர்கள் பின்பற்றுவதன் மூலமே அவர்களது கால்பந்தாட்ட ஆற்றல்களில் முன்னேறத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது என்றார் தேவசகாயம்.

நேபாளத்துடனான போட்டியில் தடுத்தாடும் உத்தியைக் கையாண்ட இலங்கை அணியினர் எதிர்த்தாடுவதிலும் திறமையாக செயல்பட்டுள்ளனர்.

இலங்கை அணிக்கு கோல் போடுவதற்கான 4, 5 வாய்ப்புகள் கிடைத்ததுடன் நேபாளத்துக்கு இலங்கையின் பின்களத்தை ஊடுருவிச் செல்ல முடியாமல் போனதாக தேவா மேலும் குறிப்பிட்டார்.

போட்டியின் 60ஆவது நிமிடத்துக்குப் பின்னர் இலங்கை அணியில் மாற்று வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.

இதனிடையே சலன சமீரவின் தலையில் சிறு காயம் ஏற்பட்டதால் அவரையும் மாற்ற நேரிட்டுள்ளது.

அசிக்கூர் ரஹ்மானுக்குப் பதிலாக களம் புகுந்த மரியதாஸ் நிதர்சன் போட்டியின் 83ஆவது நிமிடத்தில் பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு தாழ்வாக பந்தை உதைத்து போட்டியில் முதலாவது கோலைப் போட்டார்.

இலங்கை வீரர் ஒருவரால் எறியப்பட்ட நெடுந்தூர த்ரோஇன், நேபாள கோல் வாயிலை நோக்கி சென்றபோது, மற்றொரு இலங்கை வீரர்  பந்தை தலையால் தட்டி நிதர்சனை நோக்கி தாழ்வாக செல்லவைத்தார்.  விரைவாக செயல்பட்ட நிதர்சன் தனது இடது காலால் பலமாக பந்தை உதைத்து கோலினுள் புகுத்தினார்.

ஆனால், இலங்கையின் மகிழ்ச்சி உபாதையீடு நேரத்தில் நெபாளத்தினால் பறிக்கப்பட்டது.

பெனல்டி எல்லைக்குள் இலங்கையின் பின்கள வீரர் ஒருவர்  முரணான வகையில் விளையாடியதால் 91ஆவது நிமிடத்தில் நேபாளத்துக்கு வழங்கப்பட்ட பெனல்டி கோலாக மாறியது. இதன் காரணமாக போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் இலங்கை அணியினரின் கால்பந்தாட்ட ஆற்றலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையிட்டு திருப்தி அடைவதாக மொறிசன் கூறியதாக தேவா தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச தரம் வாய்ந்த அஸ்பயர் பயிற்சியகத்தில் பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமருக்கும் கத்தார் கால்பந்தாட்ட சங்கம் மற்றும் அஸ்பயர் பயிற்சியக நிருவாகத்துக்கும் இலங்கை அணியினர் நன்றி கூறியதாக இராஜமணி தேவசகாயம் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21