கோப் அறிக்கை வெளிவந்தமை  நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி  : பிரதமர்  

Published By: MD.Lucias

28 Oct, 2016 | 05:39 PM
image

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் தொடர்பாக அரச பொது முயற்சிகள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) அறிக்கையை  வெளியிட்டமை நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  பாராளுமன்றமே இறுதித்தீர்மானம் எடுக்கும் என்றும்  சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கோப்குழுவின் அறிக்கை அதன் தலைவரும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தியினால் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவருடைய உரையில் மேலும் தெரிவித்ததாவது, 

கோப்குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் நடைபெற்றுவரும் நல்லாட்சியில் இவ்வாறான அறிக்கையை சமர்ப்பிக்க முடிந்துள்ளது. இது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். 

பாராளுமன்றத்திற்கான அதிகாரங்களை உறுதிப்படுத்துமாறு நாம் போராடினோம். பாராளுமன்ற குழுக்களை அமைக்குமாறு  பத்து வருடங்காளாக கோரிக்கை விடுத்து போராடிவந்தோம். அந்த நேரத்தில் நீங்கள்(ஒன்றிணைந்த எதிரணியினர்) அவற்றை நிராகரித்தீர்கள். தற்போது எனக்கு கீழ் இருக்கும் நிறுவனத்தில் தான் இந்தக் கோப் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கை வெளிவருவதில் எமக்கு பிரச்சினை  இல்லை. இந்த அறிக்கையை முதலில் அச்சிடுவோம்.  அதன்  பின்னர் அதனை வாசித்து வாதவிவாதங்களைச் செய்வோம். 

இலங்கை மத்திய வங்கியில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த கையேடுகளை நான் சட்டமா அதிபருக்கு ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளேன்.  சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் அடுத்த கட்டசெயற்பாடுகளை முன்னேடுக்க முடியும். அதில் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. 

கிறீஸ் நிறுவன பிணை முறிகள் தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் தற்போது  பிரச்சினை இருக்காது. கிறீஸ் பிணை முறியைக் கண்டுபிடித்தவர் யார்? அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக 147மில்லியன் ரூபாவை பெற்றுக்கொடுப்போமாயின் மேலும் பணத்தை இந்த இடத்தில் கண்டுபிடிக்கலாம். அவ்வாறிருக்கையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய சம்பிரதாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள்(ஒன்றிணைந்த எதிரணியினர்) இதற்கு எதிர்ப்புத்தெரிவிப்பது ஏன்? நாங்கள் இதற்கு  இடமளிக்கமட்டோம் என்றே நீங்கள்(ஒன்றிணைந்த எதிரணியினர்) நினைத்தீர்கள். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதே எமது முதல் செயற்பாடாகும்.

கோப்குழுவின் அறிக்கை குறித்து இந்த சபையே தீர்மானிக்கும். சபை இந்த அறிக்கையை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இந்த அறிக்கை  தொடர்பாக என்ன செய்யலாம் என்ற ஆலோசனை பெறுவதற்காக நாம் இதனை சட்டமா அதிபருக்கு அனுப்புவோம். சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அங்கு கூறமுடியும். 

இதற்கு முன்னர் அறிக்கை வெளியிடப்பட்டதும் இப்படி நடந்ததா? இப்படி செய்தீர்களா?(ஒன்றிணைந்த எதிரணியினர்) தற்போது சத்தம்போடுகின்றீர்கள். எவ்வளவு சத்தம் போட்டாலும் இது தான் உண்மையாகும்.  எவராவது தவறிழைத்திருந்தால் அதனை ஆராய்ந்து பார்ப்போம். நாம் கள்வர்களையும் நல்லாட்சியின் பக்கம் அழைத்து வந்திருக்கின்றோம். நல்லாட்சியின் பாதுகாவலர்கள்(ஒன்றிணைந்த எதிரணியினர்) இங்கே இருக்கின்றனர். நாம் புதிய சம்பிராயத்தை உருவாக்கியுள்ளோம். இது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08