இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு கோப் குழு விடுத்துள்ள பரிந்துரை

Published By: Digital Desk 4

01 Jun, 2022 | 09:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இந்திய கடனுதவி மற்றும் ஏனைய கடனுதவி திட்டங்களைப் பயன்படுத்தி மருந்து பற்றாக்குறையை தீர்க்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு பரிந்துரை செய்தார்.

Articles Tagged Under: கோப் குழு | Virakesari.lk

மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நாட்டில் இருக்கவில்லை என்றும் குறித்த நிதியை முகாமைத்துவம் செய்வதில் காணப்பட்ட சிக்கல் நிலைமையை தற்போது அவானிப்பதாக கோப் குழுவின் தலைவர் அரச மருந்தக கூட்டுத்தாபன அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

கடந்த மாதம் 13ஆம் திகதி வரையில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை குறித்தும்,தீர்வு தொடர்பில் ஆராயவும்,மற்றும் அடுத்தக்கட்ட செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் நேற்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டனர்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 200 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றிருந்த போதும் 2022.04.22ஆம் திகதி வரையில் 55.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரண வழங்கல்களுக்கு மாத்திரம் அமைச்சின் மருத்துவ உப குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அது குறித்த நிதியுதவின் 28 சதவீதம் எனவும்,2022.05.18ஆம் திகதி வரை 92.2மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான விலைப்பட்டியல் மாத்திரம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

நாட்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படும் பட்சத்தில் இந்த நிதியை பயன்படுத்தி தேவையான மருந்து பொருட்களை பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோப் குழுவின் உறுப்பினர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

இந்திய கடனுதவி திட்டத்திற்கு மேலதிகமாக மருந்து பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு  கிடைத்துள்ள உலக வங்கி கடன்,உலக சுகாதார தாபனத்தின் உதவி,ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி,மற்றும் ஏனைய நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள உதவி ஆகியவை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்திய கடனுதவி உள்ளிட்ட அனைத்து கடனுதவிகளும் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம்  எனவும் இதுவரை அந்நிதி செலவிடப்படவில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

நிர்வாக தீர்மானங்கள் மற்றும் உரிய அனுமதியைப் பெற்று இந்த நிதியைப் பயன்படுத்தி மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தால் 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என கோப் குழுவின் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

மருந்துப் பற்றாக்குறையைக்கு தீர்வு காண கிடைக்கப்பெற்றுள்ள அமெரிக்க டொலர் நிதியைச் முறையாக முகாமைத்துவம் செய்து விரைவாகப் அவற்றை பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகுகிறது.மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நாட்டில் இருக்கவில்லை என்றும் முகாமைத்துவம் செய்வதில் காணப்பட்ட சிக்கல் நிலைமையை தற்போது அவானிப்பதாக கோப் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மருந்துகளை கொள்வனவு செய்யும் போது ரூபாய் தட்டுப்பாடு காணப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.இதன்போது நிகழ்நிலை முறைமை ஊடாக நிதி அமைச்சின் செயலாளர் குழுவில் பங்குப்பற்றி ரூபாய் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும்,விரைவாக தீர்வு காண நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் நிதியமைச்சின் செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ வழங்கல்களை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட கணனிக் கட்டமைப்பு முறையாக செயற்படுத்தப்படாமை தொடர்பில் கோப் குழு அவதானம் செலுத்தியது.இந்த கட்டமைப்பை உருவாக்கும் நிறுவனத்திற்கு சுமார் 645 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளமையும்,அதன் பராமரிப்பிற்கு 5 மில்லியன் ரூபாய் வழங்கப்படுகின்றமையும் கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது.இருப்பினும் இந்த அந்த கட்டமைப்பு முறையாக செயற்படவில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்;டது.

இருதய நோய் தொடர்பான அத்தியாவசிய மருந்துகள்,ரேபீஷ் நோய் தொடர்பான மருந்துகள்,மயக்க மருந்துகள் மற்றும் ஒவ்வாமை தொடர்பான அத்தியாசிய மருந்து கொள்வனவில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02