அமெரிக்காவில் மதுபோதையில் கார் ஓட்டிக்கொண்டு நிர்வாணமாக செல்பியெடுத்த இளம்பெண் ஒருவர் பொலிஸ் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிர்யான் நகரை சேர்ந்த மிராண்டா ராடர் என்ற 19 வயதுடைய பெண் அங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று மது அருந்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது திடீரென அவரது கார் ஒரு பொலிஸாரின் ரோந்து பணியில் இருந்த வாகனத்தின் மீது மோதுண்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த பொலிஸார் உடனடியாக இறங்கி சென்று பார்த்துள்ளனர். அப்போது, இளம்பெண் தனது உடைகளை அவசர அவசரமாக அணிந்துள்ளார்.மேலும், அவருக்கு அருகில் ஒரு வையின் போத்தலும் திறந்த நிலையில் இருந்துள்ளது.

இளம்பெண்ணை உடனடியாக கைது செய்து பொலிஸார் விசாரணை செய்தபோது, வீதியில் சென்றுக்கொண்டு இருந்தபோது உடைகளை நீக்கிவிட்டு நிர்வாணமாக கையடக்கத்தொலைபேசியில் செல்பியெடுத்துள்ளார்.

பின்னர், அப்புகைப்படங்களை ஸ்னாப்செட் என்ற சமூக வலைத்தளம் மூலம் அவரது காதலனுக்கு அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர்,  குறித்த பெண்ணை எச்சரித்த பொலிஸார் 2,000 டொலர் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.