ஷங்காயில் 2 மாதங்களுக்கு பின் கொவிட் கட்டுப்பாடுகள் தளர்வு

Published By: Digital Desk 3

01 Jun, 2022 | 03:40 PM
image

சீனாவின் வா்த்தக தலைநகரான ஷங்காயில்  ஊரடங்கு உத்தரவு இரண்டு மாதங்களுக்கு பிறகு தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை 2 கோடியே 50 இலட்சம்  மக்கள் வசிக்கும் நகரத்தில் பெரும்பாலான மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

கட்டுப்பாட்டு பகுதிகளில் நிலைமைக்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஏறத்தாழ ஆறரை இலட்சம் பேர் தொடர்ந்து தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

article-image

ஷங்காயில் கொவிட் ஊரடங்கு  தேசிய பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளியதோடு, பெரும்பாலான மக்களை வீட்டுக்குள் முடக்கியது.

அதேநேரத்தில் இரக்கமற்ற மற்றும் அடிக்கடி குழப்பமான கட்டுப்பாடுகள் நேரடியாகவும், இணையத்திலும்  எதிர்ப்புகளைத் தூண்டியது.

அனைத்து கட்டுப்பாடுகளும் படிப்படியாக நீக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஒட்டுமொத்தக் கொள்கையான "ஜீரோ கோவிட் திட்டம்" நடைமுறையில் உள்ளது.

People travel on a subway in the Jing'an district of Shanghai on June 1, 2022, after the end of the lockdown that kept the city two months with heavy-handed restrictions.

பொதுபோக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  கடைகள் திறக்கப்பட்டுள்ளன, பெரிய கடைகளில் 75 சதவீதமானவர்களுக்கு உட்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மீண்டும் சேவையை ஆரம்பிக்கலாம் ஆனால் உணவருந்த அனுமதி இல்லை. 

திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08