சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல்  அரசியலமைப்பை திருத்த முடிவு?  

Published By: MD.Lucias

28 Oct, 2016 | 04:08 PM
image

(ரொபட் அன்டனி)

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் தற்போதைய  அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வது குறித்து     தேசிய அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக  தெரிவிக்கப்படுகின்றது. அதாவது   பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மட்டும் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்துகொள்வது  தொடர்பில்  ஆராயப்படுவததாக  அரசதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.        

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரண்டு கட்சிகளான   ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்  இவ்வாறு  சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல்     அரசியலமைப்பு விவகாரத்தை கையாள்வது   குறித்து ஆராய்ந்துவருகின்றன.  

குறிப்பாக    தேர்தல் முறை மாற்றம் மற்றும்  தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு முறைமையில் தீர்வு   என்ற  இரண்டு விடயங்களையும்   சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல்    பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஆனால்   நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம்  செய்யவேண்டுமாயின் அல்லது அந்த முறைமையை  நீக்கவேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டியது கட்டாயமாகும்.  

எனவே   நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம்  செய்யாமல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மட்டும்  செய்துகொள்ளக்கூடிய   தேர்தல் முறை மாற்றம் மற்றும்  தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு முறைமையில் தீர்வு  ஆகிய   விடயங்களை  அரசியலமைப்பு திருத்தமாக செய்து கொள்வது  குறித்து அரசாங்கத் தரப்பில்  ஆராயப்படுவதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40