கேகாலை - ஹெட்டிபொல பண்டாரநாயக்க வித்தியாலய மாணவர்கள் 50 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வாமை காரணமாக இன்று நண்பகல் 12.00 மணியளவில் இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

குறித்த பாடசாலையில் தரம் 6, 7 மற்றும் 8 இல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் குறித்த பகுதியின் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.