1996ஆம் ஆண்டு இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்று தந்த  இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமானது.

1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் 20 வருட நிறைவையொட்டியும் சமூக தொண்­டு நிறுவனமொன்று நிதி சேகரிப்பதற்காகவும் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டியில் மோதிய அப்போதைய இரு அணிகளும் கண்காட்சி போட்டியில் நாளை மோத உள்ளன.

இப்போட்டி  இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டியாக அவுஸ்திரேலியாவில் நாளை நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்காக  சனத் ஜய­சூ­ரிய, களுவித்தாரண, அர­விந்த டி சில்வா, ரொசான் மஹாநாம, உப்புல் சந்தன, சமிந்த வாசு உள்ளிட்ட முன்னாள் நட்சத்திர வீரர்கள் அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ளனர்.