21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவேண்டிய 5 யோசனைகளை உள்ளடக்கி பிரதான எதிரணி பிரதமருக்குக் கடிதம்

Published By: Digital Desk 5

31 May, 2022 | 04:33 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி அமைச்சுப்பதவிகளைத் தன்னகத்தே வைத்திருப்பதற்கு அனுமதி வழங்காதிருத்தல், தேசிய முன்னுரிமை ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படுவதைக் கட்டாயமாக்கல் உள்ளிட்ட 5 யோசனைகளை அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்குவது குறித்துப் பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி பிரதமருக்கு ஐக்கிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கின்றது.

Ratification and accession to treaties under 21st Amendment to Constitution  – The Island

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனைகளை உள்ளடக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பில் நாட்டுமக்களின் அபிப்பிராயம் என்னவென்பதைக் கருத்திற்கொண்டு அரசியலமைப்புத்திருத்தச்சட்டமூலமொன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் தனிநபர் பிரேரணையாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அது 'அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம்' என்ற பெயரில் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்தத் திருத்தத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழித்தல் மற்றும் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்த்ததை மீண்டும் நடைமுறைப்படுத்தல் ஆகிய இரண்டுமே பிரதான யோசனைகளாக முன்வைக்கப்பட்டிருந்தன. 

அத்திருத்தத்தின் மூலம் நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களுக்கு இடையில் தொடர்பு ஏற்படுத்தப்படும்.

உங்களது தலைமையில் கடந்த மேமாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித்தலைவர் கூட்டத்தில் எம்மால் அறியத்தரப்பட்டவாறு, அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களை நீக்கிவிட்டு 19 ஆவது திருத்தத்தை உடனடியாகக் கொண்டுவருவதற்கு எமது கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை, 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான விடயதானங்கள், நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட 21 ஆவது திருத்தத்தில் உள்ளடங்கியிருக்காத நிலையில் அதனுடன் தொடர்புடைய சில விடயங்களை 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்குவது குறித்த யோசனைகளை முன்வைத்திருக்கின்றோம்.

அதன்படி ஜனாதிபதி தனக்குக்கீழ் அமைச்சுப்பதவிகளை வைத்திருக்கமுடியாது என்று 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்டவாறான விடயம், அதேபோன்று மீண்டும் உள்ளடக்கப்படவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றோம். 

அடுத்ததாக மத்திய வங்கி ஆளுநர் தவிர்ந்த நிதிச்சபையின் ஏனைய அனைத்து உறுப்பினர்களும் அரசியலமைப்புச்சபையினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைவாக நியமிக்கப்படவேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பவேண்டும்.

மேலும் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்தல் மற்றும் அவற்றில் எதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானித்தல் ஆகியவற்றுக்காக தேசிய முன்னுரிமை ஆணைக்குழுவொன்றை சுயாதீன ஆணைக்குழுவாக ஸ்தாபிப்பதுடன், அதற்கான உறுப்பினர்கள் அரசியலமைப்புச்சபையின் பரிந்துரைகளுக்கு அமைவாக நியமிக்கப்படவேண்டும்.

அடுத்ததாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள் உள்ளிட்ட அரச பதவிகளை வகிக்கும் அனைவரும் அவர்களது சொத்து விபரங்களை வெளியிடுவதைக் கட்டாயமாக்குவதுடன் அதனை மீறுபவர்கள் அல்லது பொய்யான தகவல்களை வெளியிடுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை வழங்குவதற்கு அவசியமான திருத்தங்கள் உள்ளடக்கப்படவேண்டும்.

கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் அரசுடைமையாக்குவதை முன்னிறுத்தி, இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக அவசியமான திருத்தங்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்ற 5 யோசனைகள் அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51