மறைந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரத்தின் 'வாழ்வும் பணியும்' நூல் வெளியீட்டு விழா - ஒரு கண்ணோட்டம்

Published By: Digital Desk 5

31 May, 2022 | 01:57 PM
image

(எம்.வை.எம். சியாம்)

கொத்மலை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர், ஊடகவியலாளரும் கொத்மலை பிரதேசமத்தியஸ்த சபையின் உப தலைவருமான துரைசாமி நடராஜா மறைந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரம் 'வாழ்வும் பணியும்' என்ற நூலை எழுதியுள்ளார்.

14 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் 304 பக்கங்களுடன் எளிய மொழிநடையில் அமைந்துள்ளது. இதில் பேராசிரியர் வாழ்க்கை அனுபவங்கள் செயற்பாடுகள் என்பவற்றுடன் பல பொதுவான விஷயங்களையும் நூலாசிரியர் நூலில் உள்ளடக்கியுள்ளார்.

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மறைந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரம் 'வாழ்வும் பணியும்' என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 ஆம் திகதி கொழும்பு செட்டித்தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களுடைய உருவ படத்திற்கு மலர் மாலை சூட்டப்பட்டு சுடர் ஒளிஏற்றப்பட்டது. 

பின்னர் அவருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும்செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு நிகழ்வு இனிதே ஆரம்பமானது.

பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து வெளியீட்டுரை நிகழ்வை மலையக அபிவிருத்தி சங்கத்தின் ஸ்தாபகர் பி. தவக்குமார் நடத்தினார். 

பேராசிரியருக்கும் மலையக அபிவிருத்தி மன்றத்திற்கும் இடையிலான தொடர்பு மற்றும் இப்புத்தகத்தை

எழுதுவதற்கான பிணைப்பு என்ன என்பது தொடர்பாகவும் சுருக்கமாக தெளிவுபடுத்தி இருந்தார். 

மலையக அபிவிருத்தி மன்றம் 16 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்ட்டதாகவும் அதனை ஆரம்பிப்பதற்கு வித்திட்டவர் பேராசிரியர் சோ. சந்திரசேகர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஆரம்ப கட்டங்களில் தொய்வை சந்தித்த மலையக அபிவிருத்தி மன்றம் அன்னாரின் அளப்பறிய அர்ப்பணிப்போடு இன்று 16 வது வருடத்தில் தடம் பதித்து இருக்கிறது என்றார். 

அன்னாரின் வாழ்க்கை,  சேவைகளை நினைவு கூறும் முகமாகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இந்நூல்  மாணவர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் அவருடைய வரலாற்றை தெரிந்து கொண்டு அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைக்கு அது உந்து சக்தியாக அமையும் என்றார்.

நிகழ்வின் அடுத்த நிகழ்வாக நூல் வெளியீடு இடம்பெற்றது.

பெ. முத்துலிங்கம் உரையாற்றினார். இதில் அன்னாரின் வாழ்க்கை வரலாறு, அவரின் சாதனைகள், அவர் ஆற்றிய சேவைகள் மற்றும் அன்னாரின் இறுதி நாட்கள் என்று பல விடயங்கள் கூறினார். 

பேராசிரியரின் கூறப்படாத எண்ணில் அடங்காத வெறும் வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாத விடயங்கள் இருப்பதாகவும் என்றும் அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து மறைந்த பேராசிரியர் சோ.சந்திரசேகர த்தின் 'வாழ்வும் பணியும்' என்ற நூலின் முதல் பிரதியை அன்னாரின் பாரியார் சந்திரசேகரம் சந்தா அம்மையாருக்கு புத்தகத்தின் ஆசிரியரினால் வழங்கி வைக்கப்பட்டது. 

பின்னர் பேராசிரியர்கள் மற்றும் மலையக அபிவிருத்தி மன்றத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் புத்தகத்தின் முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டார்கள்.

கலாநிதி இரா. ரமேஷ் அவர்களினால் நூல் மதிப்பீட்டுரை இடம்பெற்றது. மலையக சமூகத்தின் யாரும் எட்ட முடியாத உயரத்தை எட்டி பிடித்தவர். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பீடாதிபதியாக செயற்பட்டவர். வாசிப்பு அவரின் உயிர் மூச்சு எழுத்து அவரது பணியாக காணப்பட்டது. 

அன்னார் யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆசிய, தென்னாசிய அபிவிருத்தி நிறுவனம் மீபெயில் அமைத்து இருந்தது. 

அதில் ஆலோசகராக தனது இறுதி காலங்களில் செயற்பட்டார். அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டவர். 

அவர் இந்தியாவின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்தார், லங்கா சமசமாஜ கட்சி, தமிழரசு கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பவற்றுடன் நடுநிலை போக்கு கொண்டிருந்தார். 

அனைவரும் வாசிக்க வேண்டிய மலையக மாணவர்கள் தமது வாழ்க்கையில் முன்னேற அதிகம் வாசிக்க வேண்டிய நூல் என்றார் அவர்.

புத்தகத்தின் ஆசிரியர் துரைசாமி நடராஜா அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது. கல்வித்துறையில் அவரை தவிர்த்து விட்டு எதையும் பேச முடியாது. 

அந்தளவு அவரின் சேவைகள் அளப்பறியது. எந்த விடயத்தையும் தெட்டத் தெளிவாக விவரிக்க கூடியவர். 

எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்க வேண்டி போராடியவர். மொழிபெயர்ப்பு ஆற்றலை கொண்டிருந்தார். ஆங்கில புலமை கொண்டவர். நகைச்சுவையாளர், பாடகர், சிறந்த நடிகர் செயற்பட்டார்.

சமூகத்திற்காக தமது முழுமையான பங்களிப்பை வழங்கிய மறைந்த பேராசிரியர் அவர்கள் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவர் என்றார்.

மேலும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மறைந்த பேராசிரியர் சோ.சந்திரசேகரம் 'வாழ்வும் பணியும்' என்ற நூலின் முதற் பிரதிகள் விற்பனை மூலம் திரட்டப்பட்ட நிதி அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கனடாவைச் சேர்ந்த இந்திய பூர்வீக இலங்கை தமிழர் பேரவையின் தலைவர் ஜெய்கின் ராஜின் காணொளிப் பதிவும் இடம் பெற்றிருந்தது என்பது சிறப்பம்சமாகும்.

நிகழ்வின் இறுதி நிகழ்வாக மறைந்த பேராசிரியர் புதல்வன் தயாளன் மூலம் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. அழைப்பையேற்று அங்கு சமூகமளித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56