(எஸ்.என்.நிபோஜன்)

அன்பின் தரிப்பிடம்  என  கட்டி எழுப்பப்பட்ட ஆணையிறவு புகையிரதநிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அரச போக்குவரத்து மற்றும் சிவில்  விமான சேவைகள் அமைச்சின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வடக்கு புகையிரத வீதியை மக்களின் உதவியினால் கட்டி எழுப்பப்படும்  வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள பாடசாலைகளின் ஒவ்வொரு மாணவ மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்ப்பணிப்பினாலும்  நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு ரூபா நிதியும்  அவர்களினால் மேற்கொள்ளப்படும் தேசிய நற்பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆசிரியர்களினால் வழங்கப்பட்ட பத்துரூபா நன்கொடையினையும் சேர்த்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன்  அன்பின் தரிப்பிடம்  என  கட்டி எழுப்பப்பட்ட ஆணையிறவு புகையிரதநிலையம், இன்றயதினம் கல்வி, இராஜாங்க அமைச்சர் வி .எஸ் .இராதாகிருஷ்ணன்  மற்றும் போக்குவரத்து  மற்றும் சிவில்  விமான சேவைகள் அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பங்கேற்புடன் கல்வி அமைச்சர்  அகிலவிராஜ் காரியவம்சம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.