ஜோன்ஸ்டனுக்கு எதிராக மேல் நீதிமன்றில் 5 வழக்குகள் தாக்கல்

Published By: Digital Desk 4

30 May, 2022 | 09:16 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு திங்கட்கிழமை (30) ஐந்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ச.தொ.ச. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொச செயற்பாட்டு பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் மூவருக்கும் எதிராக  கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 5 வழக்குகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். ( 2021, மார்ச் 26 இல் 3 வழக்குகளில் இருந்தும், 2022 ஜனவரி 28 ஆம் திகதி இரு வழக்குகளில் இருந்தும் ),

 குறித்த வழக்குகளை தாக்கல் செய்ய இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் ஆணையாளர்கள் மூவரினதும் எழுத்து மூல அனுமதி பெறப்படவில்லை என்ற நிலையில், அவ்வழக்குகளை குற்றவியல் சட்டத்தின் 126 ஆவது அத்தியாயத்துக்கு அமைய மீள  வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டில் இவ்வழக்குகளை மீளப் பெற்றுக்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அனுமதி கோரிய நிலையிலேயே, அவ்வழக்குகளை  மீளப் பெற அனுமதித்து சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

 இவ்வாறான நிலையிலேயே குறித்த 5 வழக்குகளும் திங்கட்கிழமை ( 30) மீள மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 இதன்போது 49 சாட்சியாளர்களின் பட்டியலும், 9  ஆவணங்கலும் நீதிமன்றுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினரால் சான்றாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான 5 வருட காலப்பகுதியில் 153 சதொச ஊழியர்களை கடமைகளிலிருந்து விலக்கி, அரசியல் நடவடிக்கைகளில் இணைத்தமையினூடாக அரசுக்கு 4 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்குகள்  தொடரப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01