பெருந்தோட்ட மக்கள் எமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி கடுமையாக உழைத்து மழை வெய்யில் பாராமல் காடுகளாக காணப்பட்ட மலையக பிரதேசத்தினை பசுமையாக்கிய இவர்களுக்கு தமது பண்டிகையான தீபாவளியை கூட மனசந்தோஷத்துடன் கொண்டாட முடியாத சூழ் நிலைக்கு பொருளாதார ரீதியாக தள்ளப்பட்டுள்ளனர்.

தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் இம்மக்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதோடு தலைதூக்கவும் மற்றும் சிந்திக்க முடியாத நிலையில் தான் இம்மக்களை வழிநடத்தும் கட்டமைப்பினை வைத்திருக்கின்றனர்.

தேர்தல் காலத்தில் பொய்யான வாக்குறுதி மக்கள் மத்தியில் வழங்குதல் யானைக்கு சோளப்பொறி போடுவது போல் சில பொருட்களை கொடுத்து தத்தமது அரசியல் நாடகத்தினை அரங்கேற்றுகின்றனர்.

இவர்களின் கூத்துக்கு மயங்கும் அப்பாவி தொழிலாளர்கள் ஏமாந்து வாக்குகளையும் கொடுத்து மாதாமாதம் சந்தா பணத்தியையும் செலுத்தி வருகின்றனர்.

இம்மக்களுக்கு இருதியாக கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான் தீபாவளி பண்டிகைக்கு முற்பணமாக 6500 ரூபா வழமையாக வழங்கப்படும் கொடுப்பனவுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை தீபாவளி பண்டிகைக்காக மேலதிகமாக 3500 ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இக்கொடுப்பனவு இன்றுவரை அக்கரப்பத்தனை தலவாக்கலை போன்ற பிரதேசங்களில் உள்ள தோட்ட நிர்வாகங்கள் வழங்கவில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பிள்ளைகளுக்கு உடைகள் வாங்குவதா அல்லது வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்குவதா என பல்வேறுப்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் இவ்வருட தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களுக்கு நிலுவை கொடுப்பனவு வாங்கி தருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தபோதும் அதனை பெற்றுக்கொடுக்கவில்லை.

அத்தோடு தீபாவளி முற்பணமாக 3500 ரூபா வழங்குவதற்கு கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்த தொழிற்சங்க அதிகாரிகள் அதனையும் முறையாக பெற்றுக்கொடுக்க வில்லையென தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறான சூழல் நிலையிலேயே இம்முறை தீபாவளி பண்டிகை மலையகத்தில் கொண்டாடப்படுகிறது.