அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி சார்பில் போட்­டி­யிட எதிர்­பார்த்­துள்ள டொனால்ட் டிரம்ப் முஸ்­லிம்கள் தொடர்பில் வெளி­யிட்ட கருத்­தா­னது ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் மேலும் பலரை ஆட்­சேர்ப்­ப­தற்கே வழி­வகை செய்­துள்­ள­தாக தான் தெரி­வித்­தி­ருந்த விமர்­ச­னத்தை ஆத­ரித்து அமெ­ரிக்க முன்னாள் இரா­ஜாங் கச் செய­லாளர் ஹிலாரி கிளின்டன் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

அவர் அமெ­ரிக்க ஜன­நா­யகக் கட்­சியின் சார்பில் மேற்­படி ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட எதிர்­பார்த்­துள்ளார்.

இந்­நி­லையில் அவர் விவாத நிகழ்ச்­சி­யொன்றின் போது எதிர் வேட்­பா­ள­ரான டொனால்ட் டிரம்ப் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்­கான சிறந்த ஆட்­சேர்ப்­பாளர் என குறிப்­பிட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து இந்த விமர்­சனம் குறித்து ஹிலாரி மன்­னிப்புக் கோர வேண்டும் என டொனால்ட் டிரம்ப் கோரி­யி­ருந்தார்.

சிரிய அக­திகள் அமெ­ரிக்­காவில் மீளக் குடி­ய­மர்த்­தப்­ப­டு­வ­தற்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்த டொனால்ட் டிரம்ப், எது­வித சான்­று­களும் இல்­லாத நிலையில் 9/11 தாக்­கு­தல்­களை நியூ ஜெர்­ஸி­யி­லுள்ள அமெ­ரிக்க முஸ்­லிம்கள் மகிழ்ச்சி ஆர­வாரம் செய்­த­தாக தெரி­வித்து கடும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் அவ­ரது கருத்­துக்கு ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் மட்­டு­மல்­லாது அவ­ரது சொந்தக் கட்­சியைச் சேர்ந்த அவ­ரது எதிர்ப்­பா­ளர்­களும் கடும் கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்நிலையில் ஹிலாரி கிளின்டன் தனது விமர்சனம் சரியான ஒன்றென தெரி வித்துள்ளார். தான் இது தொடர்பில் மன் னிப்புக் கோரப்போவதில்லை என அவர் கூறினார்.