மக்கள் வங்கி அசாதாரணமான நெருக்கடிகளுக்கு மத்தியில் மீண்டெழுந்துள்ளது

Published By: Digital Desk 5

30 May, 2022 | 04:29 PM
image
  • 2022 1 ஆம் காலாண்டில் ரூபா 7.4 பில்லியன் ஒன்றுதிரட்டிய வரிக்குப் பிந்தைய இலாபத்தை அறிவித்துள்ளது.

  • 2022 மார்ச் 31 இல், வங்கியின் தனி அடிப்படையிலான 15.7% மற்றும் குழும அடிப்படையில் 16.1% என்ற தொழில்துறையின் அதிகபட்ச மூலதன போதுமை விகிதத்தை (CAR) பேணியுள்ளது.

  • ஒன்றுதிரட்டிய சொத்துக்கள், வைப்புத்தொகைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் முற்பணங்கள் 10.6%, 6.2%மற்றும் 1.1% அதிகரித்து முறையே ரூபா 3.1 டிரில்லியன், ரூபா 2.3 டிரில்லியன் மற்றும் ரூபா 2.0 டிரில்லியனை எட்டியுள்ளது.

  • பணவீக்க அழுத்தங்கள் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த தொழிற்பாட்டுச் செலவுகள் 2021 1 ஆம் காலாண்டு மட்டத்தில் பேணப்பட்டுள்ளன.

  • வங்கியானது அதன் டிஜிட்டல் அடைவு மட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், அனைத்து வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளில் 70.0% க்கும் அதிகமானவை இப்போது டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன, இது 2021 1 ஆம் காலாண்டின் இறுதியில் 64.0% ஆக இருந்தது.

(கொழும்பு / மே 30, 2022): மக்கள் வங்கி 2022 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்கான முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.

இதற்கு அமைவாக ஒன்றுதிரட்டிய மொத்த தொழிற்பாட்டு வருமானம் 51.9% ஆல் அதிகரித்து ரூபா 42.6 பில்லியனை எட்டியுள்ள அதே நேரத்தில் மொத்த தொழிற்பாட்டுச் செலவுகள் 0.3% ஆல் மட்டுமே அதிகரித்து ரூபா 13.1 பில்லியன் ஆக காணப்பட்டது.

பணவீக்க அழுத்தங்கள் இருந்தபோதிலும் சிறந்த செலவுக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் மேம்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதை இப்பெறுபேறுகள் பிரதிபலிக்கின்றன.

ஓன்றுதிரட்டிய வரிக்கு முந்தைய இலாபமான ரூபா 11.0 பில்லியன் ஆனது  2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியை விட 9.8% வளர்ச்சியைக் குறிக்கிறது.

2022 1 ஆம் காலாண்டில் குழுமத்தின் மொத்த தொழிற்பாட்டு வருமானத்தில் 71.4% ஆக இருந்த தேறிய வட்டி வருமானம், 29.2% ஆல் அதிகரித்து ரூபா 30.4 பில்லியனை எட்டியது, இது சொத்து வளர்ச்சி மற்றும் தேறிய வட்டி இலாப மட்ட மேம்பாடுகள் இரண்டையும் பிரதிபலிக்கிறது.

இது 2021 1 ஆம் காலாண்டில் காணப்பட்ட 3.6% இல் இருந்து 4.1% ஆக அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பிழப்பின் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட ரூபா 3.4 பில்லியன் அந்நியச் செலாவணி தேறிய ஆதாயங்கள் நீங்கலாக, வட்டி வருமானம் அல்லாத அடிப்படையிலான வருமானம், 2021 1 ஆம் காலாண்டின் 13.0% உடன் ஒப்பிடும்போது மொத்த ஒன்றுதிரட்டிய தொழிற்பாட்டு வருமானத்தில் 20.0% இற்கும் அதிகமாக இருந்தது.

ஏனைய வருமான ஆதாரங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது. செலவில் இருந்து வருமானக் கண்ணோட்டத்தில், அடிப்படையில் விற்பனை வளர்ச்சி மற்றும் செலவுக் கட்டுப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

2021 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவாக்கப்பட்ட 54.9% உடன் ஒப்பிடும்போது, 2022 1 ஆம் காலாண்டில் குழுமத்தின் செலவிலிருந்து வருமான விகிதம் 38.2% ஆக காணப்பட்டது.

குழுமத்தின் முக்கிய வாடிக்கையாளர் பிரிவுகளில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகள் மற்றும் ரூபாய் மதிப்பிழப்பு ஆகியவற்றிலிருந்து எழும் எதிர்மறை தாக்கம் உட்பட – ஏனையவற்றுக்கு மத்தியில் - நாட்டின் பொருளாதார முன்னேற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் ஒன்றுதிரட்டிய கடன் பதிவழிப்பு கணிப்பீடுகள் இந்த காலகட்டத்தில் அதிகரித்தன.

ஒன்றுதிரட்டிய வரிக்குப் பிந்தைய இலாபம் ரூபா 7.4 பில்லியனாக காணப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 12.9% ஆல் குறைவடைந்துள்ளது.

அதே நேரத்தில் வங்கியின் தனித்த அடிப்படையில், வரிக்குப் பிந்தைய இலாபம் 2021 1 ஆம் காலாண்டை விட 1.1% அதிகரித்து ரூபா 5.5 பில்லியன் ஆக பதிவாக்கப்பட்டுள்ளது.

2021 1 ஆம் காலாண்டில் 1.42% ஆக இருந்த சொத்துகளின் மீதான ஒன்றுதிரட்டிய வருமானம் இந்த காலாண்டில் 1.48% ஆக காணப்பட்டது.

ஒன்றுதிரட்டிய வைப்புத்தொகை 6.2% ஆல் அதிகரித்து ரூபா 2.3 டிரில்லியனை எட்டியதுடன், நடைமுறைக் கணக்கு - சேமிப்புக் கணக்கு (CASA) 40.0% மட்டங்களில் பேணப்பட்டது. ஒன்றுதிரட்டிய தேறிய கடன்கள் ரூபா 2.0 டிரில்லியனை எட்டியுள்ளது.

ஒட்டுமொத்த மொத்தக் கடன்களின் செயல்பாடாக நிலை 3 (Stage 3) கடன்களின் அதிகரிப்பு இந்த காலகட்டத்தில் வங்கியின் தனித்த மற்றும் ஒருங்கிணைந்த அடிப்படைகளில், நாட்டின் அழுத்தமான பொருளாதார சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கிறது.

ஒன்றுதிரட்டிய சொத்துக்கள் ரூபா 3.1 டிரில்லியனை எட்டியதுடன், ரூபாய் மதிப்பிழப்பிற்கான செம்மையாக்கலுடன், 10.6% விரிவடைந்து 5.0% க்கு நெருக்கமாக உள்ளது.

அடுக்கு I (Tier I) மற்றும் மொத்த மூலதன போதுமையானது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் காணப்பட்ட முறையே 13.4% மற்றும் 17.9% உடன் ஒப்பிடும்போது,  2022 மார்ச் 31 இன் இறுதியில் முறையே 12.0% மற்றும் 16.1% ஆக இருந்தது.

வங்கியின் தனித்த அடிப்படையில், இவை முறையே 11.0% மற்றும் 15.72% (2021 இறுதியில்: 12.6% மற்றும் 17.8%) என்பதுடன், இரண்டிலுமே எந்த சலுகை நிவாரணங்களும் அல்லது பிற விதிவிலக்கான செம்மையாக்கல்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பெறுபேறுகள் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவரான திரு. சுஜீவ ராஜபக் அவர்கள், “காலங்கள் மிகவும் அசாதாரணமானவை என்பதுடன் நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் முகங்கொடுத்திராத ஒரு சூழலில் உள்ளமை தெளிவானது.

எவ்வாறாயினும், வங்கியின் பெறுபேறுகள் அதன் நிதி வலிமை மற்றும் இந்த சவாலான சூழ்நிலைகளில் அவற்றைக் கடந்து செல்லக்கூடிய திறன் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.

ஏனையவற்றைப் போலவே, நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமையே இந்த நிறுவனத்தின் பேரழுத்தத்திற்கு முக்கிய ஆதாரம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு பரந்த தேசிய வகிபாகத்தைக் கொண்ட, உள்நாட்டில் முறைசார் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கியாக, இந்த நிறுவனம் கொவிட் 19 க்குப் பின் பெட்ரோலியம், மருந்து, நிலக்கரி மற்றும் உரம் போன்ற நாட்டின் அத்தியாவசிய இறக்குமதிகளில் பெரும்பகுதியை ஆதரிப்பதன் மூலம் அரசாங்கம் மற்றும் நாட்டின் உள்ளக சூழல் அமைப்பு செயல்பாட்டை எந்தவித இடையூறும் இல்லாமல் ஆதரிப்பதில் முன்னணிப் பங்காற்றியது. வங்கியின் நிலைப்பாட்டில் இருந்து அழுத்தத்தை குறைக்க, அதன் முக்கிய பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவில் தற்போது பல நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றன,” என்று குறிப்பிட்டார்.

மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பொது முகாமையாளருமான திரு. ரஞ்சித் கொடிதுவக்கு அவர்கள் கூறுகையில்: “சவால்கள் கடந்த காலங்களில் காணப்பட்டதைப் போலல்லாமல், குறுகிய காலத்திற்கும் மேலாக தொடரக்கூடியவை.

வணிகம் மற்றும் செயல்பாட்டு நிலைப்பாட்டில் இருந்து, சில முக்கிய பகுதிகளில் எங்கள் கவனத்தை நாம் தீவிரப்படுத்தியுள்ளோம்.

வணிகத்தை எடுத்துக்கொண்டால், தளம்பலான வட்டி வீத சூழல் மற்றும் தற்போது காணப்படுகின்ற தேறிய வட்டி இலாப மட்டங்களில் தவிர்க்க முடியாத அழுத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வட்டி அல்லாத வருமான ஆதாரங்களில் எங்கள் கவனத்தை அதிகரித்துள்ளோம்.

மேலும், நாட்டின் வெளிநாட்டு நாணய பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் தளம் மற்றும் அடிச்சுவட்டை விரிவுபடுத்துவதில் நாம் தற்போது செயற்பட்டு வருகிறோம்.

இதை விட, நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கமாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் மற்றும் சில பொருளாதார முக்கியமான சந்தைப் பிரிவுகளுக்கு ஆதரவளிக்க அதிக வளங்களை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.

செயல்பாட்டை எடுத்துக்கொண்டால், எங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவதை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, எமது அனைத்து முக்கியப் பகுதிகளிலும் தொழில்நுட்பத்தில் மேலும் முதலீடு செய்து வருகிறோம்.

மேலும் இந்த சவாலான காலங்களில் வங்கியின் தளத்தை மேலும் வலுப்படுத்த இது அவசியம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

நாங்கள் தொடர்ந்து எங்கள் உள்ளக செயல்முறைகளையும், ஒட்டுமொத்த இடர் முகாமைத்துவ கட்டமைப்பையும் மேம்படுத்தி வருகிறோம்.

எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை முழுமையாக உணர்ந்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கும், எங்கள் பங்குதாரர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் பூரண அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.   

நாடளாவிய ரீதியில் 743 கிளைகள் மற்றும் சேவை மையங்களை உள்ளடக்கிய இலங்கையின் மிகப் பெரிய வங்கி அடிச்சுவட்டைக் கொண்ட நாட்டின் முதன்மையான, உரிமம் பெற்ற வர்த்தக வங்கி மக்கள் வங்கியாகும்.

60 வருட வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், 14.0 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கும், சுமார் 19.0 மில்லியன் கணக்கு உறவுகளுக்கும் அயராது மற்றும் விடாமுயற்சியுடன் சேவை செய்யும் 8,000 ஊழியர்களின் பலத்தால் வங்கி பயனடைகிறது.

நாட்டில் வேறு எந்தவொரு நிதியியல் சேவை வழங்குனரை விடவும் மிகவும் கூடுதலான எண்ணிக்கையான வாடிக்கையாளர் தளமாக இந்த எண்ணிக்கை காணப்படுகின்றது.

1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த வங்கியானது Fitch Ratings Lanka Ltd இடமிருந்து “AA- (lka/ rating watch negative)” என்ற தேசிய நீண்ட கால கடன் தர மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58