இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் உதய வீரதுங்கவை போல நாட்டை விட்டு வெளியேறவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று கோப் அறிக்கை முன்வைக்கப்பட்ட போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் திருமண நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே  வெளிநாடு சென்றுள்ளார் என இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.