வடக்கில்  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கு முன்பிருந்தே அச்சுறுத்தல் இருப்பதாக தான் தெரிவித்து வரும் நிலையில், அரசாங்கம் அதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்வையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களை அதிகரிப்பதுடன், இராணுவ முகாம்களை சரியாக பேண வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.