புரோஸ்டேட் சுரப்பி பிரச்சினைக்கு தீர்வு.!

Published By: Robert

28 Oct, 2016 | 10:43 AM
image

வயதானவர்கள் சந்திக்கும் சிக்கலான சிறுநீரக பிரச்சனை புரோஸ்டேட் சுரப்பி பிரச்சினை. இதன்போது வயதான ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பது தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். பலரும் இந்த நோயை அலட்சியம் செய்துவிடுகிறார்கள். இந்த நோய்க்கும் சிறுநீரகத்தில் ஏற்படும் புற்றுநோய்க்கும் ஒரேவிதமான அறிகுறிகள்தான். வயதான ஆண்கள் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்நோயை 80 சதவீதம் சாதாரண மருந்துகளால் குணப்படுத்திவிடலாம். சிறுநீர் கழிக்கவே முடியவில்லை என்ற நிலை தோன்றினால் மட்டும் எண்டாஸ்கோப்பி சிகிச்சையை மேற்கொள்ளலாம். 

சில ஆண்களுக்கு விதைப்பையில் வீக்கம் தோன்றலாம். ஏதோ அடிபட்டதனால் ஏற்பட்ட வீக்கம் என்று நினைத்துவிடாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். ஏனெனில், இது விதைப்பையில் தோன்றும் புற்றுநோயாகவும் இருக்கலாம். நவீன மருத்துவம் இதுபோன்ற புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்தும் வல்லமை பெற்றிருக்கிறது. எனவே, தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும்.

அதற்கு முன் இந்த பிரச்சினை வராமல் தற்காத்திட வேண்டும் என்றால் வயதான பிறகும் தண்ணீரை அதிகமாக அருந்தவேண்டும். இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்கவேண்டும். புகை பிடிப்பதை தவிர்க்கவேண்டும். புகைப்பிடிப்பவர்களின் அருகாமையையும் தவிர்க்கவேண்டும். கெட்ட கொழுப்பு சத்துள்ள உணவுப் பொருளை முற்றாகத்தவிர்க்கவேண்டும். உடல் எடையை சீராக பராமரிக்கவேண்டும். உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

டொக்டர் .சதீஷ் M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04