அரசியல் போராட்டத்தை தொடர்ந்து இளைஞர்கள் முன்னெடுப்போம் - சாணக்கியன்

Published By: Digital Desk 3

30 May, 2022 | 10:49 AM
image

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டத்தை இளைஞர்களாகிய நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். இதனை உறுதியாக திருகோணமலை மண்ணில் இருந்து தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று (29) இடம்பெற்ற கொவிட் தொற்றால் உயிரிழந்த கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்காக இடம் பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையின் தலைவர் ச.குகதாசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உட்பட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது,

இந்தக் கருத்தை நாம் ஏன் தெரிவிக்கின்றேன் என்றால் இங்கு வருகை தந்துள்ள மக்களையும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் கூட்டத்தையும் வைத்து அது மட்டுமல்லாது இன்று நான் வாகரையில் பல கூட்டங்களுக்கு சென்று வந்தேன். 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அபிவிருத்தி என்ற மாயையில் சிக்கியிருந்த மக்கள் இன்று தமது வறுமைக்க அப்பால் எமது உரிமைப் போராட்ட பயணத்தில் பயணிக்க உறுதியாக இருக்கின்றார்கள். 

அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை திசை திருப்பி இருந்தவர்களின் சுய ரூபங்களை அவர்கள் இனங்கண்டுகொண்டுள்ளனர் என்றார்.

அதேபோல அன்று கோட்டா வேண்டும் என்று சொன்னவர்கள்தான் இன்று கோட்டா வேண்டாம் என்று போராடுகின்றனர். 

அது போல முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக சிங்கள மக்கள் கண்ணீர் விட்டு அழுகின்றனர். தமிழிலே தேசிய கீதம் பாடுகின்றனர்.

இவ்வாறான நல்ல மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58