தீபா­வளி என்ற பெயரைப் பாவித்து ஹோட்­டல்கள் மற்றும் ஸ்தாப­னங்கள் தமது  வியா­பார நோக்­கத்தை நிறைவு செய்­வ­தற்­காக இந்து மக்­களின் மனங்­களை புண்­ப­டுத்­தக்­கூ­டாது என்று அகில இலங்கை இந்து மா மன்றம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது­கு­றித்து மா மன்றம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

தீபா­வளித் திரு­நாளை விசேட அசைவ உண­வு­க­ளுடன் கொண்­டாட முடி­யு­மென சில ஹோட்­டல்கள் புதினப் பத்­தி­ரி­கையில் விளம்­ப­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக எமது அங்­கத்­துவ சங்­கங்­களின் உறுப்­பி­னர்கள் பலர் எமது கவ­னத்­திற்குக் கொண்­டு­வந்­துள்­ளனர். இது தீபா­வ­ளியை அனுஷ்­டிக்கும் உண்­மை­யான மார்க்­க­மா­காது என்­பதை நாம் மன­வே­த­னை­யுடன் தெரி­விக்­கின்றோம். எமது சமயம் பிரா­ணி­களை வதை செய்­வதை எவ்­வ­கை­யிலும் அனு­ம­திக்­க­வில்லை. 

எனவே அசைவ உணவு மற்றும் மது­பா­னங்­க­ளுடன் தீபா­வ­ளியைக் கொண்­டா­டு­வதை எமது மர­பாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

எனவே ஹோட்டல் மற்றும் ஸ்தாப­னங்கள் தீபா­வளி என்ற பெயரைப் பாவித்து தமது வியா­பார நோக்­கத்தை நிறைவு செய்­வ­தற்­காக இந்து மக்­களின் மனங்­களைப் புண்­ப­டுத்­தக்­கூ­டா­தெனச் சுட்­டிக்­காட்­டு­கின் றோம்.