மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

Published By: Digital Desk 4

29 May, 2022 | 03:06 PM
image

(எம்.மனோசித்ரா)

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் மீது கடந்த 9 ஆம் திகதி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து முக்கிய அரசியல் பிரமுகர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பதிவு - யாழ்.மனித உரிமைகள்  ஆணைக்குழு | Virakesari.lk

அதற்கமைய முன்னாள் பிரதமருடன் , பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கும் , பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிற்கும் நாளை மறுதினம் முதலாம் திகதி புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவன்ட் கார்ட் நிறுவனத்தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபயை நாளை திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது வட்டரெக்க சிறைச்சாலைக் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் அண்மையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். அத்தோடு எதிர்வரும் 2 ஆம் திகதி வியாழக்கிழமை பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17