சுயாதீன படங்களை ஊக்குவிக்கும் பா. ரஞ்சித்

Published By: Digital Desk 5

28 May, 2022 | 09:55 AM
image

'சேத்துமான் போன்ற படைப்பாளியின் சுதந்திரத் தன்மையுடன் உருவாகும் சுயாதீன படங்களை பொருளாதாரரீதியாக ஆதரிக்க தயாராக இருக்கிறேன்' என நீலம் புரொடக்ஷன்ஸ் எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், முன்னணி திரைப்பட இயக்குநருமான பா. ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகி, சோனி லைவ் டிஜிட்டல் தளத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'சேத்துமான்'.  

புதுமுக நடிகர்களின் பங்களிப்பில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பற்றி தயாரிப்பாளரும், இயக்குநருமான பா ரஞ்சித் பேசுகையில், '' எமக்கு இயக்குநர் தமிழ் பற்றி முன், பின் எதுவும் தெரியாது. 

எம்முடைய குருநாதர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்ற அறிமுகம் மட்டுமே அவருக்கும், எமக்கும் இடையில் இருந்தது. 'காலா' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இயக்குநர் தமிழ் எம்மை சந்தித்து, இப்படத்தின் கதையை விவரித்தார். 

கதை கரு எமக்கு பிடித்திருந்ததால் முழு திரைக்கதை வடிவத்துடன் எம்மை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டேன். 

அதன்பிறகு எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை சந்தித்து, அவருடைய பங்களிப்புடன் இப்படத்தின் திரைக்கதை வடிவத்தை உருவாக்கி எம்மிடம் சமர்ப்பித்தார். 

வாசித்தவுடன் நிறைவாக இருந்தது. இந்த திரைக்கதையை வேறு சிலரிடம் வாசிப்பதற்காக அளித்திருந்தேன். 

அவர்களும் பரிசோதனை முயற்சியாக இருக்கும் என்று தெரிவித்தனர். இயக்குநர் தமிழுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, மிக குறைந்த முதலீட்டில் இப்படத்தை நேர்த்தியாக உருவாக்க இயலும் என தன்னுடைய திட்டத்தை விவரித்தார். 

அவர் சுயாதீன படைப்பாக 'சேத்துமானை' உருவாக்க விரும்பினார். அதற்கு முழுமையாக ஆதரவளித்தேன். 

படத்தை அவர் திட்டமிட்டபடி குறைந்த முதலீட்டில் உருவாக்கினார். முதல் பிரதியை பார்த்தவுடன் நான் சொல்ல விரும்பும் அரசியலை துல்லியமாக அவதானித்து படைப்பாக உருவாக்கியிருந்தார். 

இத்தகைய படைப்புகளை முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்கு திட்டமிட்டோம். 

ஏனெனில் சர்வதேச அளவில் இது போன்ற குறைந்த முதலீட்டு படங்கள் திரையிடப்பட்டு ஏராளமான வருவாயை ஈட்டி வருகின்றன. 

அதற்கான சந்தை உலக அளவில் இருக்கிறது. அதன்படி பல சர்வதேச விழாக்களில் பங்குபற்றி விருதுகளை குவித்தது. தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலும், அவர்களுக்கான அரசியலும் சமநிலையில் பேசப்பட்டு இருப்பதால், எமக்கு பிடித்த படைப்புகளில் இதுவும் ஒன்றானது. 

இதற்காக ஒத்துழைத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் எழுத்தாளர் பெருமாள் முருகனின் தீவிர ரசிகன். 

அவருடைய 'கூளமாதாரி' நாவலை வாசித்து விட்டு, அதனை திரைப்படமாக உருவாக்க வேண்டுமென திட்டமிட்டிருந்தேன். 

ஆனால் தற்போது வேறு ஒருவர் இந்த நாவலை திரைப்படமாக உருவாகி வருவதாக கேள்விப்பட்டேன். 

அவருக்கு எம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 'சேத்துமான்' போன்ற சிறு முதலீட்டு படங்களை நீலம் புரொடக்சன்ஸ் தொடர்ந்து தயாரிக்கும்.

சுயாதீன படைப்பாகவும், சில பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடும் படைப்பாளிகளையும் எங்களது நிறுவனம் தேவையான உதவிகளை செய்து ஊக்கமளிக்கும்.'' என்றார்.

'சேத்துமான்' மக்கள் விரும்பும் உணவினை உண்பதற்குரிய அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது என்பதால், இந்த திரைப்படத்தை மில்லியன் கணக்கிலான பார்வையாளர்கள் டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35