மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்கும் எண்ணமில்லை - முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி

Published By: Vishnu

26 May, 2022 | 04:17 PM
image

(நா.தனுஜா)

மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றார் என்றும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்துள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, 'மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்றுக்கொள்ளும் எண்ணம் எனக்கில்லை.

என்னைப் பொறுத்தமட்டில் பாரிய நெருக்கடிக்கு மத்தியிலும் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுவருகிறார் என்றே கருதுகின்றேன்' என்று தெரிவித்துள்ளார்.

 இந்த இடைக்கால அரசாங்கத்தின் புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்படக்கூடும் என்ற செய்திகள் வெளியாகியிருந்தன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04