பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை விவகாரம் : இருவர் கைது - பொலிஸ் பேச்சாளர்

Published By: Vishnu

26 May, 2022 | 03:57 PM
image

 (எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரது கொலை தொடர்பில் புதன்கிழமை (25) மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதற்கமைய இக்கொலைகள் தொடர்பில் இதுவரையில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரது கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் செயற்பட்டு வரும் மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பிரிவு இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த பிரிவினால் நேற்று காலை வரை 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் 28 வயதுடைய நிட்டம்புவ - மடுவேகெதர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவர் கட்டட நிர்மாணப்பணிகளுடன் தொடர்புடைய தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

37 வயதுடைய மற்றைய சந்தேகநபர் கேகாலை - வரகாலபொல பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவராவார். இவர் நிட்டம்புவ பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றில் தொழில் புரிந்து வருபவராவார்.

இவ்விருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்தோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதியை இவர்கள் இருவரும் மின்கம்பமொன்றில் கட்டி வைத்து , பாரதூரமாக தாக்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு சாட்சிகளுடன் இனங்கண்டுள்ளது.

அத்தோடு இவ்விரு சந்தேகநபர்களும் குறித்த சாரதியின் மனைவியின் வங்கி கணக்கிற்குரிய ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி வெவ்வேறு நிறுவனங்களில் 2 இலட்சத்திற்கும் அதிக பணத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதோடு , புதிய கையடக்க தொலைபேசியொன்றையும் கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்த பொருட்களை ஏனைய நபர்களிடம் விற்று அதன் மூலம் கிடைக்கப் பெற்ற பணத்தைக் கொண்டு இவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமையும் இனங்காணப்பட்டுள்ளது.

இவ்விருவர் தொடர்பிலும் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58