19 ஆவது திருத்தத்தின் கூறுகளை மீளுறுதிப்படுத்துமா 21 ஆவது திருத்தச்சட்டமூலம் ? -கரிசனை கொள்வதாகக் கூறுகிறது சட்டத்தரணிகள் சங்கம்

Published By: Digital Desk 4

25 May, 2022 | 07:16 AM
image

(நா.தனுஜா)

அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சில முக்கிய சரத்துக்கள் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்காத நிலையில், அரசியலமைப்புப்பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆகியன தொடர்பில் 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் 21 ஆவது திருத்தம் மூலம் மீளுறுதிப்படுத்தப்படுமா? என்பது குறித்துத் தாம் கரிசனைகொள்வதாகத் தெரிவித்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அச்சட்டத்திருத்தமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் மேலும் சில விடயங்கள் மாற்றியமைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றது.

காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு பயணத்தடை  விதியுங்கள் - சட்டத்தரணிகள் சங்கம் | Virakesari.lk

திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் தமது நிலைப்பாடு என்னவென்பதைத் தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சட்டத்தரணிகள் சங்கம் முழுமையாக ஆராய்ந்து நோக்கியுள்ளது.

'நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைகள்' கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி சட்டப்பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டது.

அவற்றில் 13 ஆவது பரிந்துரையாக அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை நீக்கி, மீண்டும் 19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடியவகையில் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற விடயம் காணப்பட்டது. 

அத்தோடு 19 ஆவது திருத்தத்தின்கீழ் காணப்பட்ட அரசியலமைப்பேரவை மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் மீண்டும் ஸ்தாபிக்கப்படுவதுடன் அவற்றுக்குரிய நிதிச்சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்தன்மை என்பன மேலும் விரிவுபடுத்தப்படவேண்டும்.

அந்தவகையில் அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சில முக்கிய சரத்துக்கள் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்காத நிலையில், அரசியலமைப்புப்பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆகியன தொடர்பில் 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் 21 ஆவது திருத்தம் மூலம் மீளுறுதிப்படுத்தப்படுமா? என்பது குறித்து நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம்.

ஜனாதிபதி ஏதேனும் விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சுக்களை தனக்குரியதாக்கிக்கொள்வது 19 ஆவது திருத்தம் மூலம் தடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் 21 ஆவது திருத்தம் அத்தகைய சரத்துக்களை உள்ளடக்கியிருக்கவில்லை என்பதுடன் ஜனாதிபதி தனக்கு விரும்பிய அமைச்சுப்பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கும், எந்தவொரு அமைச்சர் வசமிருக்கக்கூடிய விடயதானங்களையும் தனக்குரியதாக்கிக்கொள்வதற்கும் இடமளிக்கின்றது. 

எனவே ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுப்பதவியையும் வகிப்பதைத் தடைக்கக்கூடியவகையில் அரசியலமைப்பிற்கான 44(2) ஆவது சரத்தின் மீதான திருத்தமும் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவேண்டும் என்று நாம் கருதுகின்றோம். அதுமாத்திரமன்றி அத்தகைய திருத்தங்கள் 21 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டவுடனேயே நடைமுறைக்குக்கொண்டுவரப்படவேண்டும்.

அதேபோன்று பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்றதிலிருந்து நான்கரை வருடங்களின் பின்னரே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து 21 ஆவது திருத்தச்சட்டமூலம் வேறுபடுவதை அவதானிக்கமுடிகின்றது. எனவே பாராளுமன்றக்கலைப்பு தொடர்பில் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பது எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

மேலும் நாணயச்சபை உறுப்பினர்கள் மத்திய வங்கி ஆளுநரின் அனுமதிக்கு மேலதிகமாக அரசியலமைப்புப்பேரவையின் அனுமதியுடனேயே நியமிக்கப்படவேண்டும், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண ஆளுநர்கள், வெளிநாடுகளுக்கான தூதுவர்கள் உள்ளிட்டோர் அமைச்சரவை அமைச்சர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாகவே நியமிக்கப்படவேண்டும், சட்டத்திற்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்டு அரசியலமைப்புப்பேரவையின் ஆலோசனையின் பிரகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர்களின் ஆலோசனையின் பிரகாரமே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கல்கள் இடம்பெறவேண்டும், 

சுயாதீன ஆணைக்குழுக்களின் நிதிச்சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்தன்மை ஆகியன உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற பரிந்துரைகளையும் 21 ஆவது திருத்தத்தில் உள்ளடக்குமாறு நாம் வலியுறுத்தியிருந்தோம்.

அத்தோடு அரசியலமைப்புப்பேரவையில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதோரின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக அதிகரிக்கப்படவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்படவேண்டும் என்றும் நாம் பரிந்துரைத்திருந்தோம். 

எனவே இலங்கையின் உறுதிப்பாட்டை நோக்கிய பயணத்திற்கு மிகவும் அவசியமான உரியவாறான 21 ஆவது திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17